latest

SIR: “தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும்” – சு.வெங்கடேசன் எம் பி கூறுவது என்ன? |Su.venkatesan met press people at madurai


ஓட்டைகளை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை கிடையாது, ஓட்டைகளை அடைப்பது தான் கடமை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா முழுவதும் கைவிடப்பட வேண்டும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு திரும்ப வேண்டும், எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்குவது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான தேர்தல் முறையை சிதைப்பது போல, இதயம் போன்ற தேர்தல் முறையை அழிக்க முயற்சி நடக்கிறது.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்

ஜனநாயகத்தில் தேர்தல் எனும் இதயத்தை அரிக்கிற செயல். தேர்தல் ஆணையம் கட்சிகளின் எந்தக்கேள்விக்கும் முறையாக பதில் அளிக்கவில்லை. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். பீகாரில் 3 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ.ஆரில் வாக்குகள் நீக்கப்படுவது கண்கூடாகத் தெரியும். குறிப்பிட்ட சமூக மக்களின் வாக்குகளை நீக்கும் வகையில் நடவடிக்கை.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு தேர்தல் ஆணையம் ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தை கைப்பொம்மையாக ஒன்றிய அரசு பயன்படுத்த உள்ளது. பாஜகவின் அரசியல் நலனுக்கு எதுவெல்லாம் வாய்ப்போ அதையெல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறார்கள்.

பாஜக வரவேற்றதால் வரவேற்கும் அதிமுகவின் நோக்கம் மக்கள் நோக்கமல்ல. ஜனநாயக அடிப்படையான தேர்தல் முறை காப்பாற்ற வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தில் சிதைவை ஏற்படுத்தக்கூடாது. நாங்கள் விழிப்போடு இருப்போம். தேர்தல் ஆணையம் தேர்தல் ஜனநாயக முறையில் பெருச்சாளிகள் நுழைய ஓட்டை ஏற்படுத்தக்கூடாது” என்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *