latest

விராட் கோலியின் உணவகத்தில் ஒரு சாதத்தின் விலையே இவ்வளவா..? மெனுவில் என்னென்ன இருக்கு தெரியுமா..?

[ad_1]

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி, தற்போது உணவக துறையிலும் அதிக கவனம் ஈர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அரை சதம் அடித்து அசத்திய நிலையில், களத்திற்கு வெளியே அவர் தொடங்கியுள்ள மும்பை ரெஸ்டாரன்ட் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோலி தனது முதல் மும்பை உணவகத்தை 2022ஆம் ஆண்டில் தொடங்கினார். இதற்கு ‘One8 Commune’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரெஸ்டாரன்ட் அமைந்துள்ள இடம் மிகவும் விசேஷமானது. இது, புகழ்பெற்ற பாடகர் கிஷோர் குமாருக்குச் சொந்தமான ‘கௌரி குஞ்ச்’ என்ற ஜுஹு பங்களாவில் அமைக்கப்பட்டுள்ளது. தான் நீண்ட காலமாகப் போற்றும் கிஷோர்குமாருக்கு அளிக்கும் மரியாதையாக இந்த இடத்தை கோலி தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

விராட் கோலியின் உணவகத்தில் ஒரு சாதத்தின் விலையே இவ்வளவா..? மெனுவில் என்னென்ன இருக்கு தெரியுமா..?

மெனுவில் விராட் கோலியின் விருப்ப உணவுகள் : இந்த உணவகத்தின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி, தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், “விராட் ஃபேவரைட்ஸ்” என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. இதில் டோஃபு ஸ்டீக், ட்ரஃபிள் ஆயில் சேர்த்த மஷ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர்ஃபுட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன.

இருப்பினும், இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ (Zomato) தகவலின்படி, அவித்த சாதம் ரூ.318, உப்புப் போட்ட பிரெஞ்ச் ஃபிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல் குறிப்பாக, செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு கிடைக்கின்றன.

‘One8 Commune’ பெயரின் பின்னணி என்ன..?: இந்த உணவகத்தின் பெயரான ‘One8 Commune’ என்பது கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உணவகத்தின் சுவரில் இந்த எண் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இங்குப் பகல் நேரத்தில் வெளிச்சம் நன்றாக வர வசதியாக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டு, அழகான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

உணவின் தரமே மிக முக்கியம் என்று கோலி கூறியுள்ளார். இந்த ரெஸ்டாரன்ட் மூலம், விருந்தினர்கள் திருப்தியடைந்து மீண்டும் வர வேண்டும் என்பதே விராட் கோலியின் முக்கிய நோக்கமாக உள்ளது. மும்பையில் மட்டுமின்றி, டெல்லி, கொல்கத்தா மற்றும் புனே போன்ற நகரங்களிலும் ‘One8 Commune’ கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *