6 மாதங்களில் அபார வளர்ச்சி கண்ட பென்னி ஸ்டாக்ஸ்: ரூ.50க்குள் தான் விலை!


கடந்த ஆறு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தையில், குறிப்பாகப் பென்னிப் பங்குகள், முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், சில பென்னிப் பங்குகள் சந்தையை விஞ்சி, நம்பமுடியாத பலமடங்கு வருமானத்தை வழங்கியுள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் சென்செக்ஸ் 6% வளர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 11% உயர்ந்துள்ளது. ஆனால், ரூ.50-க்கும் குறைவான விலையுடைய சில பங்குகள் இதே காலகட்டத்தில் 942% வரை உயர்ந்துள்ளன என்று பங்குச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

6 மாதங்களில் அபார வளர்ச்சி கண்ட பென்னி ஸ்டாக்ஸ்: ரூ.50க்குள் தான் விலை!

iStreet Network Ltd: இந்த பங்கு ஆறு மாதங்களில் 942% லாபத்தை ஈட்டியுள்ளது. பிஎஸ்இ-யில் இதன் பங்கு விலை ரூ.4.69-ல் இருந்து ரூ.48.87 ஆக உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் இந்நிறுவனம், செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் ஐடி தயாரிப்பு விநியோக சேவைகளை வழங்குகிறது.

Triton Corp Ltd: ட்ரைடன் கார்ப் லிமிடெட் 220% வருமானத்தை அளித்துள்ளது. இதன் பங்கு விலை ஆறு மாதங்களில் ரூ.0.55-ல் இருந்து ரூ.1.76 ஆக அதிகரித்தது. இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி சார்ந்த சேவைகளை, குறிப்பாக கால் சென்டர் செயல்பாடுகள் மற்றும் ஐடி சார்ந்த வணிகங்களுக்கான மேலாண்மை ஆலோசனைகளை வழங்குகிறது.

Also Read

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? பாபா வாங்கா வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

Chandrima Mercantiles Ltd: சந்ரிமா மெர்கன்டைல்ஸ் லிமிடெட் பங்குகள் 196% உயர்ந்துள்ளன. இதன் விலை ரூ.2.95-ல் இருந்து ரூ.8.76 ஆக அதிகரித்தது. விவசாயப் பொருட்கள் மற்றும் தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம்.

Take Solutions Ltd: லைஃப் சயின்ஸ் துறையில் செயல்படும் டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட் பங்கு விலை 189% உயர்ந்துள்ளது. இதன் விலை ரூ.8.60-ல் இருந்து ரூ 24.92 ஆக அதிகரித்தது. விரிவான மருத்துவ, ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

Recommended For You

கருணை காட்டும் தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை சரிவு!! ரூ.90,000க்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்!!

Hybrid Financial Services Ltd: ஹைபிரிட் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் 170% லாபத்தை ஈட்டியுள்ளது. இதன் பங்கு விலை ரூ.11.95-ல் இருந்து ரூ.32.27 ஆக உயர்ந்தது. கடன் மீட்பு, நிதி மற்றும் வரிவிதிப்பு தொடர்பான மேலாண்மை ஆலோசனை சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

Jayabharat Credit Ltd: ஜெயபாரத் கிரெடிட் லிமிடெட் முதலீட்டாளர்களுக்கு ஆறு மாதங்களில் 137% வருமானத்தை வழங்கியுள்ளது. பிஎஸ்இ-யில் இதன் பங்கு ரூ.13.90-ல் இருந்து ரூ.33.07 ஆக உயர்ந்தது.

Organic Coatings Ltd: ஆர்கானிக் கோட்டிங்ஸ் லிமிடெட் ஆறு மாத காலகட்டத்தில் 119% லாபத்தை ஈட்டியுள்ளது. அச்சிடும் மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *