கருணை காட்டும் தங்கம்!! ஒரே நாளில் 2 முறை விலை சரிவு!! ரூ.90,000க்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்!!


சென்னையில் தங்கத்தின் விலை ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகிறது .காலை 9.30 மணிக்கு மற்றும் பிற்பகல் 3:30 மணிக்கு என சென்னையில் தங்கம் விலை இரண்டு முறை மாற்றப்படுகிறது.

தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்த போது காலை 9:30 மணிக்கு ஒரு முறையும் பின்னர் மாலையும் என ஒரே நாளில் தங்கத்தின் விலை பல ஆயிரம் உயர்ந்து பொதுமக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. இத்தகைய சூழலில் இன்றைய தினம் ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை குறைந்து இருக்கிறது. அதுவும் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் சரிவடைந்து 90,000க்கும் கீழ் தங்கம் விலை சரிந்துள்ளது.

கருணை காட்டும் தங்கம்! ஒரே நாளில் 2 முறை விலை சரிவு! ரூ.90,000க்கும் கீழ் சென்றது ஒரு சவரன் தங்கம்!!

இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் பொறுத்தவரை நேற்று 91,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று காலை 1200 ரூபாய் சரிந்து 90,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் இன்று பிற்பகலில் தங்கம் விலை மேலும் குறைந்து இருக்கிறது.

கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு மேலும் விலை குறைந்து 11,75 ரூபாயாக மாறி இருக்கிறது ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை மாலையில் 11, 075 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையுடன் ஒப்பிடும்போது மாலையில் ஒரு கிராம் தங்கம் 225 ரூபாய் குறைந்திருக்கிறது.

Also Read

பங்குச்சந்தை வேண்டாம், தங்கத்தை வாங்கு! 20 ஆண்டுகளுக்கு முன் கூறிய அறிவுரை செய்த மாயம்!!

ஒரு சவரனுக்கு என பார்க்கும்போது 1800 ரூபாய் எனவே காலையிலிருந்து தற்போது வரையிலான இந்த ஆறு மணி நேரத்தில் தங்கத்தின் விலை என்பது சென்னையில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து இருக்கிறது.இதன் மூலம் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 90,000 ரூபாய்க்கும் கீழ் சென்று 88 , 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் வாங்க வேண்டும் என காத்திருந்தவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது .

Recommended For You

2026ஆம் ஆண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும்? பாபா வாங்கா வெளியிட்ட கணிப்புகளால் பரபரப்பு!!

24 கேரட் தங்கமும் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 409 ரூபாய் விலை குறைந்து 12,082 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் 3,272 ரூபாய் குறைந்து 96,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கத்தை பொறுத்தவரை 1,20,820 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .

18 கேரட் தங்கமும் விலை குறைந்திருக்கிறது ஒரு கிராம் 375 ரூபாய் விலை சரிந்து 9200 ரூபாய்க்கும் ஒரு சவரன் 3 ஆயிரம் ரூபாய் சரிந்து 73 , 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. காலை விற்பனைக்கு வந்த அதே 165 ரூபாய்க்கு ஒரு கிராம் விற்பனை செய்யப்படுகிறது . நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது வெள்ளி விலை கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து இன்று விற்பனை ஆகிறது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *