latest

Delta விவசாயிகளின் கண்ணீர் கதை: நெல் கொள்முதலில் தோல்வியடைந்த ஸ்டாலின் அரசு | Ground Report | Delta farmers’ tearful story: Stalin’s government failed in paddy procurement | Ground Report


இந்த ஆண்டு வழக்கத்தைவிட டெல்டாவில் இரண்டு மடங்கு அதிகமாக குறுவை சாகுபடி நடந்துள்ளது. விவசாயிகள் எதிர்பார்த்ததைவிட நல்ல மகசூலும் கிடைத்தது. ஆனால், இதற்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள்.

காரணம், தமிழக அரசின் அலட்சியம். இந்த முறை அதிகமான விளைச்சல் வரும் என்பது தெரிந்திருந்தும், அதனை தங்கு தடையில்லாமல் காலத்தோடு கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்யவில்லை.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லை, சாக்கு இல்லை, சணல் இல்லை என்று காரணங்களைச் சொல்லி கொள்முதலைத் தாமதப்படுத்தினர். விளைவு, இரவு பகல் பாராமல் உழைத்து விளைவித்த நெல் பயிர்கள், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய வாசலிலேயே முளைக்க ஆரம்பித்துவிட்டன.

இன்னொரு பக்கம், பல விவசாயிகளுடைய நெல் பயிர்கள் மழைக்குச் சாய்ந்து வயலிலேயே முளைக்க ஆரம்பித்துவிட்டன. இதுமாதிரியான இன்னல்களும் துயரங்களும் டெல்டா விவசாயிகளின் அடையாளமாகவே மாறிவிட்டன. காலம் மாறினாலும், ஆட்சிகள் மாறினாலும் விசாயிகளின் நிலை மட்டும் மாறவே இல்லை. என்ன சொல்கிறார்கள் டெல்டா விவசாயிகள் என்பதை விரிவாகப் பதிவு செய்கிறது Vikatan Ground Report …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *