[ad_1]
தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டவை. தங்கம் , வெள்ளி விலை ஏற்றம் என்பது நேரடியாகவே சாமானிய மக்களை பாதிக்கின்றன. அந்த வகையில் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து மக்களை கலங்கடித்த தங்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த கடந்த 25ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை சரிவை கண்டது .தொடர்ந்து தங்கத்தின் விலை இறங்கும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர் . இத்தகைய சூழலில் தான் இன்றைய நாளில் சங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது .

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. நேற்று 11,075 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 11,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது . அதே போல ஒரு சவரன் தங்கம் 1080 ரூபாய் விலை உயர்ந்து 89, 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 3000 ரூபாய் குறைந்த தங்கம் இன்று காலையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. தங்கம் சவரனுக்கு 90,000க்கும் கீழ் சென்ற நிலையில் மீண்டும் அதனை கடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
24 கேரட் தங்கமும் விலை உயர்ந்திருக்கிறது ஒரு கிராமுக்கு 147 ரூபாய் விலை உயர்ந்து 12,229 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1176 ரூபாய் விலை உயர்ந்து 97 , 832 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 150 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது 9,350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . ஒரு சவரன் 1200 ரூபாய் விலை உயர்ந்து 74,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று உயர்வு கண்டிருக்கிறது கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்த சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை உயர்ந்த 1, 66,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி திடீரென இன்றைய தினம் உயர்ந்திருக்கிறது . சென்னை பொறுத்தவரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தங்கத்தின் விலை என்பது மாற்றி அமைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் இன்று காலை தங்கம் விலை உயர்ந்திருக்கிறது .
[ad_2]


