latest

எர்ணாகுளம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மையத்தில் புதிய அலுவலகம்.. முழு தளத்தையும் கைப்பற்றிய Zoho.!!

[ad_1]

இந்தியப் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation), கேரளாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது. எர்ணாகுளம் தெற்கு மெட்ரோ ரயில் நிலையக் கட்டிடத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ‘i by Infopark’ என்றழைக்கப்படும் கூட்டுப்பணி செய்யும் மையத்தின் முழு தளத்தையும் குத்தகைக்கு எடுத்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் ஜோஹோ பெற்றுள்ளது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காக்கநாடு பகுதியில் உள்ள கின்ஃப்ரா சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடந்த நிகழ்வில், ஜோஹோ கார்ப்பரேஷனின் இணை நிறுவனர் டோனி ஜி. தாமஸுக்கு (Tony G Thomas) அதற்கான அனுமதிச் சான்றிதழை வழங்கினார்.

எர்ணாகுளம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மையத்தில் புதிய அலுவலகம்.. முழு தளத்தையும் கைப்பற்றிய Zoho.!!

இன்ஃபோபார்க் வட்டாரங்களின்படி, 7 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் 4-வது தளத்தை முழுவதுமாக ஜோஹோ நிறுவனம் எடுத்துள்ளது. ஒவ்வொரு தளமும் 6,350 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த இடத்தை ஜோஹோ தனது தீர்வு மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவுகளுக்காகப் பயன்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜோஹோவின் கேரளாவில் உள்ள முதல் மையம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள நெடுவத்தூர், கொட்டாரக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த மையம், பெருநகரங்களுக்கு வெளியே அலுவலகங்களை அமைக்கும் ஜோஹோவின் உத்தியுடன் ஒத்துப்போகிறது.

இந்தக் கிராமப்புற மையத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். இந்த வசதி, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் போன்ற அதிநவீன துறைகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்துகிறது.

மேலும், ஜோஹோ நிறுவனம் உள்ளூர் இளைஞர்களைப் பணியமர்த்தும் முன்பு அவர்களுக்குப் பயிற்சி அளித்து, பின்னர் அவர்களைத் தனது பணியாளர்களாக மாற்றும் ஒரு பயிற்சித் திட்டத்தையும் வைத்துள்ளது. தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை வலுப்படுத்த, கொச்சியைத் தளமாகக் கொண்ட அசிமோவ் ரோபாட்டிக்ஸ் (Asimov Robotics) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் ஜோஹோ கையகப்படுத்தியுள்ளது. இந்தக் கையகப்படுத்தப்பட்ட நிறுவனம் கொட்டாரக்கரை அலுவலகத்தில் இருந்தே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ‘i by Infopark’ மையம், 48,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளதுடன், மாநிலத்தின் முதல் நரம்பியல் பன்முகத்தன்மைக்கு (Neurodiversity-friendly) ஏற்ற மையம் என்ற பெருமையையும் கொள்கிறது. இந்த வளாகம் 580-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்களை ஆதரிக்கும் வகையில் சிறந்த வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘i by Infopark’-ன் தலைமைச் செயல் அதிகாரி சுசாந்த் குறுந்தில் கூறுகையில், “ஜோஹோ நிறுவனம் எடுத்துள்ள 4-வது தளம் Taste என்ற கருப்பொருளை மையமாக கொண்டுள்ளது. இங்கு இளஞ்சிவப்பு நிற டோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பணியிடத்தின் ஒவ்வொரு பகுதியும் ஊழியர்களுக்கு சுகமாகவும், திறந்த மனப்பான்மையுடனும் பணியாற்றும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *