[ad_1]
உலகமே எதிர்பார்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மத்தியிலான சந்திப்பு தென் கொரியாவின் பூசான் நகரில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்தது. வழக்கம் போல் இரு தலைவர்களும் அவரவர்களுக்கான டிரான்ஸ்லேட்டர்களை வைத்துக்கொண்டு தாய் மொழியிலேயே பேசிக்கொண்டனர்.
இக்கூட்டத்தின் துவக்கத்தில், உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படைகளை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜீ ஜின்பிங் டிரம்ப்-யிடம் கூறினார். இதேபோல் டிரம்ப்-ன் Making America Great Again என்ற கனவிற்கும், சீனாவின் வளர்ச்சிக்கும் எவ்விதமான தொடர்பும், முரண்பாடும் இல்லை என ஜி ஜின்பிங், டிரம்ப்-யிடம் கூறியதாகச் சீன அரசு பத்திரிக்கை தளமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

மேலும் இரு நாட்டு தலைவர்களும் 100 நிமிடம் கலந்து ஆலோசனை செய்த நிலையில், கூட்டம் முடிந்தது பத்திரிக்கையாளர்களை சந்திக்காத காரணத்தால் இக்கூட்டத்தின் முழுமையான தகவல் வெளியாகவில்லை. வியாழக்கிழமை இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இரு தலைவர்கள் மத்தியிலான கூட்டம் துவங்கும் முன் டிரம்ப் பேசுகையில், இரு நாடுகள் மத்தியில் ஏற்கனவே பல வர்த்தக விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த சந்திப்பில் கூடுதலான சில விஷயங்களுக்கு ஒப்புக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு நடக்கும் முன் மலேசியாவில் இரு நாட்டின் வர்த்தக பிரதிநிதிகள் சந்தித்துப் பல வர்த்தக முரண்பாடுகளை விவாதித்து முடிவுக்கு வந்த பின்னரே, ஜி ஜின்பிங் மற்றும் டிரம்ப் தென் கொரியாவில் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள இறுதி ஒப்புதல் அளித்துள்ளனர். மலேசியக் கூட்டம் தான் இன்றைய தென்கொரியச் சந்திப்பு நடத்த அடிப்படை காரணமாக அமைந்துள்ளது.
இந்த சந்திப்பு முடிந்த பின்பு டிரம்ப் இந்த 100 நிமிட கூட்டம் அமேசிங் எனத் தெரிவித்தார், இதேபோல் ஜி ஜின்பிங் ஒரு கடுமையான negotiator, இதேவேளையில் ஒரு சிறந்த நாட்டின் சிறந்த தலைவர் எனப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் டிரம்ப்.

டிரம்ப் ஆட்சியிலும் சரி, பைடன் ஆட்சியிலும் சரி சீனாவுக்குத் தொடர்ந்து அதிகப்படியான நெருக்கடிகளைக் கொடுக்கப்பட்டு வந்தது, இது டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தக போராக மாறிவிட்டது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு சீனா மீது அதிரடியாக வரிகளை விதித்தார், மற்ற நாடுகளைப் போல் சீனாவும் அமைதியாக ஏற்றுக்கொள்ளும் என நினைத்து டிரம்ப்க்கு பெரும் ஏமாற்றமாக மாறிவிட்டது.
சீனாவுக்கும் பதிலுக்குப் பதில் வரியை விதித்து 200 -250 சதவீத வரிகளை விதிக்க துவங்கியது. இதுமட்டுமா அமெரிக்க எப்படி பல்வேறு பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தோ, அதேபோல் சீனாவும் பல்வேறு பொருட்களுக்குத் தடைவிதிக்கத் துவங்கியது. இதில் ஆடிப்போன டிரம்ப் மளமளவென வர்த்தக தடைகளைக் குறைத்து, பேச்சுவார்த்தைக்கு வந்தார். இதன் பின்பு தான் மலேசியாவில் நடத்தக் கூட்டம், அதன் பின்பு இன்று தென்கொரியாவில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தனர்.
இந்த சந்திப்பு மூலம் அமெரிக்கா – சீனா மத்தியிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
[ad_2]
