[ad_1]
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பைசன்’ படம் வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் ஒலிக்கும் பெயராகி இருக்கிறது ’வெங்கடேச பண்ணையார்’.
தென் மாவட்டமான தூத்துக்குடி பகுதியில் நடக்கும் ஒரு குழு மோதல்களுக்கிடையிலும் சாதிய அடக்குமுறைகளுக்கிடையேயும் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து சர்வதேச அளவில் கபடியில் சாதித்த மணத்தி கணேசன் என்பவரின் கதைதான் பைசன். படத்தில் லால் நடித்திருக்கும் கேரக்டர் தொண்ணூறுகளில் தெற்கே பிரபல பிரமுகராக வலம் வந்த வெங்கடேச பண்ணையாரைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.
வெங்கடேச பண்ணையாருக்கும் அதே பகுதியில் மாற்று சமூக மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய பசுபதி பாண்டியனுக்கும் தனிப்பட்ட மோதலாகத் தொடங்கி, அந்த மோதல் இருதரப்பிலும் பல உயிர்களைக் காவு வாங்கியது.

முன்கதை இப்படி இருக்க, 2001 – 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுகிறார் வெங்கடேச பண்ணையார்.
வெங்கடேச பண்ணையார் – பசுபதி பாண்டியன் மோதல்தான் ஊரறிந்த விஷயமாக இருந்த நிலையில் போலீஸ் ஏன் வெங்கடேச பண்ணையாரை என்கவுன்டர் செய்தது என்கிற கேள்வி அப்போது முதல் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சரியான பதில் இன்று வரை கிடைத்தபாடில்லை.
[ad_2]
