[ad_1]
தற்போது உலகம் முழுவதுமே சமூக வலைத்தளங்களில் இன்ஃப்ளுயன்சர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டது. கொரோனா வைரஸ் பரவலின் போது பல்வேறு நாடுகளிலும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. மக்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அந்த சமயத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களை அதிகமாக பார்க்கத் தொடங்கினர் .
இது சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்கள் என ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வேகமாக வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது. சமூக வலைதளங்களில் அதிகமான ஃபாலோவர்களை வைத்திருப்பார்கள் , அவர்கள் பகிரக்கூடிய தகவல்களும் செய்திகளும் அவர்களை ஃபாலோ செய்யக்கூடிய பெரும்பாலானவர்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது உலக அளவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு பிரிவினராக இன்ஃப்ளூயன்சர்கள் இருக்கின்றனர் .

பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய பொருட்களையும் தயாரிப்புகளையும் விளம்பரம் செய்வதற்காக பாரம்பரிய நடைமுறைகள் எல்லாம் கடந்து தற்போது இன்ஃப்ளூயன்சர்களை தான் நாடுகின்றன . அந்த அளவிற்கு இன்ஃப்ளூயன்சர்கள் ஆதிக்கம் என்பது படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஆனால் இதுவே நம்முடைய சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகவும் மாறி இருக்கிறது.
போலியான தகவல்களை பகிர்வது அல்லது முழுமையாக தெரிந்து கொள்ளாமல் குறிப்பிட்ட சில தகவல்களை பகிர்வது மருத்துவ ரீதியிலான தகவல்கள், நிதி ரீதியான தகவல்கள் ஆகியவற்றை பகிர்வது என இதன் மூலம் அவர்களை பின்தொடர் கூடிய பெரும்பாலான மக்கள் அவை உண்மை என கருதி அவற்றை செய்து பார்த்து பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். உதாரணமாக ஒரு மருத்துவர் மருத்துவம் சார்ந்த விஷயங்களை பகிர்வதில் தவறில்லை, ஆனால் இன்ஃப்ளூயன்சர்கள் சிலர் பணம் கிடைக்கிறது என்பதற்காகவும் , தங்களுக்கு தெரிந்துவிட்டது என்பதற்காகவும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை வழங்குகின்றனர்.
அதே போல நிதி சார்ந்த, சட்டம் சார்ந்த, மருத்துவம் சார்ந்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் அது சம்பந்தப்பட்ட பிரிவில் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாமல் தங்களுக்கு கிடைத்த தகவலை அப்படியே பகிர்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். இத்தகைய சூழலில் தான் சீனா அரசு அவர்களுக்கு ஒரு பெரிய செக் வைத்திருக்கிறது.
இதன்படி சீன அரசாங்கம் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது . குறிப்பிட்ட சென்சிடிவான தலைப்புகளில் பேசக்கூடிய இன்ஃப்ளூயன்சர்கள் அது சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் இல்லை என்றால் சமூக ஊடகங்களில் அது தொடர்பான எந்த ஒரு கருத்தையும் அவர்கள் பகிரக்கூடாது என அந்த சட்டம் கூறுகிறது .

மருத்துவம், உடல் ஆரோக்கியம், நிதி, சட்டம் அல்லது கல்வி சார்ந்த இலட்சக்கணக்கான மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சீரியஸான தலைப்புகளில் பேசக்கூடிய இன்ஃப்ளூயன்சர்கள் அது சம்பந்தப்பட்ட டிகிரியை முடித்திருக்க வேண்டும் அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களும் இத்தகைய இன்ஃப்ளூயன்சர்கள் முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களின் கண்டெண்ட்களை அனுமதிக்க வேண்டும் என சீன அரசு ஆணையிட்டுள்ளது.
அக்டோபர் 25ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வந்திருக்கிறது . சீனாவில் போலியான தகவல்கள் ஆன்லைனில் அதிகமாக பரவுவதை தடுக்க இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது . மேலும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகளை விளம்பரம் செய்வதற்கும் சீன அரசாங்கம் தடை விதித்து இருக்கிறது .
எனவே மருத்துவம் ,சட்டம் ,கல்வி, நிதி சார்ந்த தலைப்புகளில் இன்ஃப்ளூயன்சர்களாக இருப்பவர்கள் அது சார்பாக அவர்களிடம் இருக்கக்கூடிய அதிகாரப்பூர்வமான தகுதிக்கான சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பித்தாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இந்த சட்டம் சில இன்ஃப்ளூயன்சர்கள் மத்தியில் விமர்சனத்தை எழுப்பி இருக்கிறது . இது கிரியேட்டிவிட்டியையும் கருத்து சுதந்திரத்தையும் தடுக்கும் வகையில் இருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர்.
தவறான தகவல்கள் மற்றும் மக்களின் உடல் நலனிலும் நிதி சார்ந்தும் தாக்கத்தை ஏற்படக்கூடிய போலியான தகவல்களும் மக்களிடம் செல்லாமல் இருப்பதை தடுக்கவே இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்திருப்பதாக சீன அரசாங்கம் விளக்கம் தந்திருக்கிறது .
டிக்டாக், வெய்போ போன்ற தளங்கள் தங்களுடைய கிரியேட்டர்கள் உண்மையிலேயே குறிப்பிட்ட தலைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதற்கான சான்றிதழ்களை பெற்ற பிறகு அவர்களின் கண்டன்டுகளை அனுமதிக்க வேண்டும் என கூறி இருக்கிறது மேலும் ஒரு தகவலை பகிரும் போது அது எந்த ஆதாரத்தில் இருந்து பெறப்பட்டது என்பதையும் அவர்கள் கட்டாயம் பகிர வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.இந்தியாவிலும் இதே போன்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? கமெண்ட் செய்யுங்கள்.
[ad_2]


