[ad_1]
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப – சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு சர்வதேச வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மாறியிருக்கும் நிலையில், தென் கொரியாவின் பூசான் நகரில் இன்று நடந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்களுக்கு தீர்வு காணப்பட்டது. இது மட்டும் அல்லாமல் அமெரிக்கா – சீனா மத்தியிலான வர்த்தக போர் அச்சமும், பதற்றமும் குறைந்துள்ளது.
இந்த சந்திப்பின் முதல் வெற்றியாக பார்க்கப்படுவது சீனா பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 57 சதவீத வரியை 47 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், இதை உடனடியாக அமலாக்கம் செய்வதாகவும் டிரம்ப் ஏர்போர்ஸ் ஓன் விமானத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

ஜி ஜின்பிங் உடனான சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், Fentanyl, அரிய கனிம உலோகம் என பல முக்கியமான விஷயங்களை வெளிப்படையாகவும், நேருக்குநேர் விவாதித்தாகவும் டிரம்ப் தெரிவித்தார். இதேவேளையில் சீனா உடனடியாக அமெரிக்காவிடம் இருந்து பெரிய அளவிலான சோயா பீன் வாங்க ஒப்புக்கொண்டு உள்ளதாக டிரம்ப் கூறினார்.
Fentanyl விவகாரம்:
அமெரிக்காவுக்குள் வரும் Fentanyl-ஐ சீனாவில் இருந்து வருவதை கட்டுப்படுத்த கட்டாயம் நடவடிக்கை எடுப்பதாக ஜி ஜின்பிங் வாக்குறுதி அளித்த காரணத்தால், Fentanyl தொடர்பாக அமெரிக்கா சீனா மீது விதித்த 20 சதவீத வரியை 10 சதவீதமாக குறைக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாகவே சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 57 சதவீத வரி தற்போது 47 சதவீதமாக குறைந்துள்ளது. இது இந்தியா மீது தற்போது விதிக்கப்பட்டு உள்ள 50 சதவீத வரியை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அதை அனைத்தையும் தாண்டி சீனா அமெரிக்காவை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க முக்கியமான ஒரு ஒப்பந்த முறையை கையாண்டு உள்ளது. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்புகளை சீன கட்டுப்படுத்த கையில் எடுத்த ஆயுதம் தான் அரிய உலோகங்கள் மற்றும் அரிய உலகோ காந்தங்கள். இதையே தான் இன்றைய சந்திப்பிலும் கையில் எடுத்துள்ளது சீனா.

Rare Earth Metals:
சீன அரசு அரிய உலோக சப்ளையை அமெரிக்காவுக்கு தொடர ஒரு வருட ஒப்பந்த நீட்டிப்பை கொடுத்துள்ளது. இந்த ஒரு வருட காலத்திற்கு தற்போது சீனா விதித்துள்ள விதிமுறைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் சப்ளையை தொடர முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அமெரிக்கா அடுத்த ஒரு வருடத்திற்கு நிலையான சப்ளையை பெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஹைய் டெக் வளர்ச்சிக்கு இந்த அரிய உலோகம் மிகவும் முக்கியம் என்பதாலும், இந்த அரிய உலோகம் உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை என்பதாலும் அமெரிக்கா சீனாவின் கண்டிஷன்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதேபோல் இந்த ஒரு வருட நீட்டிப்பு ஒப்பந்தம், இனி ஒவ்வொரு வருடமும் பேச்சுவார்த்தகைக்கு பின்பு ஏற்றுக்கொள்ளப்படும் என டிரம்ப் செய்தியாளர்களிடம் ஏர் போர்ஸ் ஓன் விமானத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து:
மேலும் இந்த சந்திப்புக்கு பின்பு அடுத்தக்கட்ட பணிகள் என்ன என்பதை டிரம்ப் விளக்கவில்லை, எனவே இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பு இறுதி ஆலோசனை செய்யப்பட்டு அதன் பின்பு முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்தில் அமெரிக்கா – சீனா மத்தியில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் கருத்து நிலவுகிறது.
[ad_2]
