latest

8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களே இந்த நம்பர் தான் உங்க தலையெழுத்தையே மாத்த போகுது!!

[ad_1]

மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனை அமைத்திருக்கிறது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் . அடுத்த 18 மாதங்களுக்குள் 8ஆவது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள பரிந்துரையை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

சம்பள கமிஷன் வழங்கக்கூடிய பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்து ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்கும். இந்த நடைமுறைகள் முடிவடைவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பளம் என்பது 2027ஆம் ஆண்டு இறுதியில் இருந்து தான் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு அரியர் பணம் என்பது அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வரவு வைக்கப்பட்டு விடும்.

8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களே இந்த நம்பர் தான் உங்க தலையெழுத்தையே மாத்த போகுது!!

8ஆவது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகை ஆகிய இரண்டையுமே உயர்த்த இருக்கிறது . இதற்காக இவர்கள் Fitment factor (ஃபிட்மண்ட் ஃபேக்டர்) என்பதை பயன்படுத்துவார்கள் . இதன் அடிப்படையில் தான் சம்பளம் என்பது உயர்த்தப்படும் . இந்த ஃபிட்மண்ட் ஃபேக்டர் எப்படி முடிவு செய்யப்படுகிறது , எவ்வளவு ஃபிட்மண்ட் ஃபேக்டர் இருந்தால் எவ்வளவு சம்பளம் உயரும் என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஃபிட்மண்ட் ஃபேக்டர் அடிப்படையில் தான் பெருக்கி வழங்குவார்கள். உதாரணமாக ஒரு நபரின் தற்போதைய அடிப்படை சம்பளம் 35,000 ரூபாய் என வைத்துக் கொண்டால் 2.1 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் கணக்கீடு செய்யப்பட்டால் அத்தனை மடங்கு சம்பளம் உயரும். அதாவது அவருக்கான புதிய அடிப்படை சம்பளம் என்பது 73,850 ரூபாயாக இருக்கும் . இந்த அடிப்படை சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வீட்டு வாடகை கொடுப்பது மற்றும் பிற அலவென்சுகள் நிர்ணயிக்கப்படும் .

Also Read

வீட்டு கடன் வட்டியில் பல லட்சங்களை சேமிப்பது எப்படி? – ஒரு சின்ன மாற்றம் செஞ்சா போதும்!!

அரசின் நிதி நிலவரம், நிதி ஒதுக்கீடு ஆகியவை தாண்டி ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் என்பதை எப்படி கணக்கிடுவார்கள் என்பதும் ஃபிட்மண்ட் ஃபேக்டரை நியமிக்க உதவும். அதாவது 7ஆவது சம்பள கமிஷன் ஒரு ஃபேமிலி யூனிட்டை 3 என கணக்கில் கொண்டது, 8ஆவது சம்பள கமிஷனில் அது 4 என கணக்கில் கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது. அப்படி குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்தால் அதற்கேற்ப சம்பளமும் உயர்த்தப்பட வேண்டும் என்பதை கொண்டு ஃபிட்மண்ட் ஃபேக்டர் உயர்த்தப்படும்.

8ஆவது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களே இந்த நம்பர் தான் உங்க தலையெழுத்தையே மாத்த போகுது!!

சம்பள கமிஷன் ஃபிட்மண்ட் ஃபேக்டர் முடிவு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யும் அதன் பின்னர் அரசு அதனை ஏற்கலாம் அல்லது குறைக்கலாம். எதுவானாலும் அரசு எடுப்பதே இறுதி முடிவு. இந்த ஃபிட்மண்ட் ஃபேக்டர் என்பது அடிப்படை சம்பளத்தை மட்டுமே பெருக்கும், அடிப்படை சம்பளம் உயர்ந்துவிட்டால் அதற்கேற்ப சதவீத அடிப்படையில் வீட்டு வாடகை அலோவென்ஸ், டிராவல் அலோவென்ஸ் ஆகியவையும் உயரும். அதே வேளையில் புது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வரும் போது அகவிலைப்படி என்பது பூஜ்ஜியமாகிவிடும்.

Recommended For You

சோஷியல் மீடியா Influencer-களுக்கு வேட்டு வைத்த அரசு..!! இனி இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது..!

ஒரு அரசு ஊழியர் 50 ,000 ரூபாய் அடிப்படை ஊதியமாக பெறுகிறார் என்றால் 8ஆவது சம்பள கமிஷன் 2.0 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டர் பரிந்துரை செய்கிறது எனும் போது அவருடைய சம்பளம் அடிப்படை சம்பளம் என்பது இரண்டு மடங்காகும் அதாவது 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாயாக மாறும் . இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு தான் வீட்டு வாடகை அலோவென்ஸ், டிராவல் அலோவென்ஸ் ஆகியவை கிடைக்கும். ஓய்வூதியதாரர்களை பொறுத்தவரை 2.0 என ஃபிட்மண்ட் ஃபேக்டர் கணக்கிடப்பட்டால் 30,000 ரூபாய் அடிப்படை ஓய்வூதியம் பெறக்கூடிய ஒரு நபருக்கு அது 60,000 ரூபாயாக உயரும் .

தற்போது 50,000 ரூபாய் அடிப்படை சம்பளம் கொண்ட நபர் அனைத்து அலோவென்ஸ் மற்றும் அகவிலைப்படி சேர்த்து 1, 03,000 முதல் 1,15,000 ரூபாய் வரை மொத்த சம்பளமாக பெறுவார். சம்பள கமிஷனுக்கு பின்னர் 1 லட்சம் என அடிப்படை சம்பளமும் அலோவென்ஸ் என 34,000 ரூபாய் என 1,34,000 ரூபாய் சம்பளமாக கிடைக்கும். தற்போது கையில் கிடைக்கும் தொகையில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒரு ஊழியருக்கு 20 – 25% வரை சம்பளம் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது .

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *