[ad_1]
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனித்தனியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் சேர்ந்து பசும்பொன் சென்றது பரபரப்பை ஏற்படுத்த, பசும்பொன்னில் டிடிவி தினகரனுடன் இணைந்து அஞ்சலி செலுத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்பு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “துரோகத்தை வீழ்த்த மூவரும் ஒன்றிணைந்துள்ளோம். மூவரும் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். தென் தமிழ்நாட்டிற்கு விருந்தாளியாக செங்கோட்டையன் வந்துள்ளார்.
அம்மாவின் தொண்டர்களை ஒன்றினைக்க இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் எங்கள் எதிரி, அவரைத்தவிர அதிமுகவிலுள்ள யாரும் எங்களுக்கு எதிரி அல்ல. எங்கள் அணியில் சசிகலாவும் விரைவில் இணைவார்” என்றார்.
[ad_2]
