php hit counter

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

3

பொகவந்தலைவை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி மாணிக்க கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை – கொட்டியாகல தோட்டத்தில் நேற்று  பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 31,32 வயதுக்கு இடைப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்களும் மீட்கப்பட்டன.

பொலிஸார் சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி பிணையில் விடுவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.