php hit counter

கொழும்பு மாநகரசபை எல்லையில் ஒரு வாரத்தில் 2,000 மெட்ரிக்தொன் குப்பை

4

கடந்த ஒரு வாரகாலப் பகுதிக்குள் சுமார் 200 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான குப்பைகள் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குவிந்துள்ளதாக கொழும்பு மாநாகர சபை பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் தெரிவித்தார்.

அத்துடன் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தீவிரப்படத்தப்பட்டுள்ள நிலையில்  சுமார் 80 வீதமான குப்பைகள் சேகரிக்கும் பணிகள்  நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கொழும்பு பகுதியில் சேரும் குப்பைகளை அறுவக்காலு  பகுதிக்கு  கொண்டு செல்லும் பணிகளின் போது புத்தளம்  பிரதேச  வாசிகளினால் எதிர்ப்பு  தெரிவிக்கபபட்டதை அடுத்து  பொலிஸ்  பாதகாப்புடன் குப்பைகளை அந்த பகுதிக்கு  கொண்டு  செல்லும்  பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறாக குப்பைகளை அறுவக்காலு பகுதிக்கு  கொண்டு செல்வதற்கா 40 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக  நாளொன்றிற்கு சுமார் 35,000 ரூபா வரையில்  செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.