php hit counter

யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

4

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் வைத்து 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.