php hit counter

அந்த நடிகருடன் ஜோடி! அமலா பால் எடுத்த முடிவு! கிசுகிசுக்கும் திரையுலகம்!

145

ராட்சசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் மீண்டும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர் .

சமீபத்தில் நடிகை அமலாபால் நடித்த ஆடை திரைப்படத்தில் இவர் துணிச்சலாக நடித்ததைக் கண்டு பல்வேறு தரப்பினரும் நடிகை அமலாபாலை பாராட்டி வந்தனர் .

இந்நிலையில் நடிகை அமலாபால் தனது தனது அடுத்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிக்க உள்ளார் . மான்ஸ்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்க உள்ளார் .

தெலுங்கில் மிகப் பெரிய ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக் ஆக இந்த படம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . தெலுங்கில் நானி மற்றும் ஷ்ரதா ஸ்ரீநாத் ஜெர்சி படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள் .


தமிழ் உருவாக இருக்கும் இந்த படத்தில் நானி வேடத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் , ஷ்ரதா ஸ்ரீநாத் வேடத்தில் நடிகை அமலாபாலும் நடிக்க உள்ளனர் . கிரிக்கெட் வீரரைப் பற்றிய கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்தப்படம் விளங்குகிறது .

ராட்சசன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .

மேலும் ராட்சசன் திரைப்படத்தின் போதே இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தன . ஆனால் இவர்கள் இருவருமே அதனை முற்றிலுமாக மறுத்தனர் . இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதால் திரையுலகில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன

Leave A Reply

Your email address will not be published.