php hit counter

அஜித்தின் மகனா இது.! இணையத்தையே கலக்கும் குட்டி தலயின் கியூட் புகைப்படம்!!

256

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவர்.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.

தொடர்புடைய படம்

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தை தொடர்ந்து அஜீத்துக்கு பெண் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. அஜித்தின் மனைவி திரைப்பட நடிகை ஷாலினி. இவர்கள் அமர்க்களம் படத்தில் இணைந்து  நடித்ததன் மூலம் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் வெளியே சென்றுள்ளனர் அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதனை அஜித் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.