php hit counter

ஆரோக்கியமான உணவை சரியாகத் தேர்ந்தெடுப்பது எப்படி?

39

மிகவும் எளிதான பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய உதவும் . அதிகமான உணவு உட்கொள்ளுதல் உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1.9 பில்லியன் பேர் அதிக எடையுடன் உள்ளனர். மேலும், 1975ஆம் ஆண்டிலிருந்து உலகளவில், அதிக எடை பிரச்சனை மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாம் உண்ணும் உணவு குறித்தான நமது யோசனை, நமது உணவு தேர்வை சரி செய்யும். அதிக எடை பிரச்சனைக்கு அது தீர்வாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.நீங்கள் உங்கள் உணவை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுக்க இதோ நான்கு எளிய வழிமுறைகள். ஆரோக்கியமில்லாத உணவு குறித்து எதிர்மறையாக சிந்தியுங்கள்ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், தொடர்ந்து ஆறு நொடிகள் உணவை உற்றுப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர் ஆனால், அந்தச் சமயத்தில் அந்த உணவில் உள்ள எதிர்மறையான விஷயங்கள் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.இது அந்த உணவு ஆரோக்கியமற்றது என்பது மட்டுமல்ல, சுவை அல்லது அதன் தோற்றம் போன்று, அந்த உணவு குறித்து அவர்கள் வெறுக்கும் விஷயம் குறித்தும் யோசிக்குமாறு கோரப்பட்டனர்.இந்த ஆய்வுக்கு பிறகு, அந்த குறிப்பிட்ட உணவை உண்பதற்கான தங்கள் ஏக்கம் 20 சதவீதம் அளவு குறைந்திருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.ஆரோக்கியமற்ற உணவின் மீது நமக்குள்ள விருப்பம் குறைந்தாலே நமது உணவுப் பழக்கம் மேம்படும் அது நம் உடல் எடையை பாதுகாக்க உதவும்.உணவு தேர்வின்போது ஆரோக்கியமான உணவு குறித்த நேர்மறையாக சிந்தியுங்கள்

அடுத்தகட்டமாக, எதிர்மறையான எண்ணங்கள் குறித்து யோசிக்கும் நேரத்தின் அளவுக்கு ஆரோக்கியமான உணவின் நேர்மறையான எண்ணங்கள் குறித்தும் யோசிக்க கோரப்பட்டனர்.இது ஆரோக்கியமான உணவின் மீது அவர்களுக்கு உள்ள விருப்பம் 14 சதவீத அளவு அதிகரிக்க உதவியது.எனவே, உணவு தேர்வின்போது அது குறித்து சிறிது நேரம் நீங்கள் யோசித்தால் நீங்கள் சிறந்த உணவை தேர்ந்தெடுக்க அது வழிவகை செய்யும்.ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்குங்கள்.

Leave A Reply

Your email address will not be published.