நாடு முழுவதுமே தெருநாய்களின் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி என பெரு நகரங்களில் தொடங்கி இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகரங்கள் வரை தெரு நாய்களால் துரத்தப்படுவது, கடிக்கப்படுவது என பலரும் தொடர்ச்சியாக புகார் கூறி வருகின்றனர்.
தெருநாய் கடிகளுக்கு ஆளாகி ரேபிஸ் வந்து பலர் இறக்கும் செய்தியையும் நாம் காண முடிகிறது. தெருநாய் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கூட வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாகி இருக்கிறது. இதுதான் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகவும் இருந்து வருகிறது.

இந்த சூழலில் பெங்களூருவில் வெளிநாட்டை சேர்ந்த ஆலிவர் ஜோன்ஸ் என்ற தொழில் முனைவோர் தெருநாய் கடிக்கு ஆளாகி இருக்கும் நிகழ்வு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஆலிவர் ஜோன்ஸ் என்ற அந்த நபர் இந்தியாவில் 100 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 879 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஸ்டார்ட் அப்களை நிறுவி இருக்கிறார். வீடியோ கேம் டிசைனராக இருக்கும் இவர் பாம்பே பிளே, மூன்ஃபிராக் போன்ற நிறுவனங்களை நிறுவி இருக்கிறார்.
To folks asking me why I dont leave India, I wont because I believe in something, and am willing to go all the way. Sometimes that means dog bites, watching my parents grow old from afar, landing in a new country with only 0, sharing a bed with pigeon nests, I have built two… https://t.co/dYJEMwLmKV
— Oliver Jones (@Agent_Oli) October 20, 2025 “>
தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தான் தெரு நாய் கடிக்கு ஆளானதாக அவர் பதிவு வெளியிட்டிருக்கிறார். பெங்களூருவில் பழைய விமான நிலைய டெர்மினலுக்கு அருகே இருக்க கூடிய பகுதியில் காலையில் ஓட்ட பயிற்சிக்கு சென்றபோது தெருநாய் கடிக்கு ஆளானேன் என கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பெங்களூரு விமான நிலைய பழைய டெர்மினலின் நுழைவாயில் பகுதியில் நான் ஓட்ட பயிற்சியில் ஈடுபடும்போது இந்த தாக்குதலுக்கு ஆளானேன் என குறிப்பிட்டுள்ளார். பெங்களூரில் ஓட்ட பயிற்சியில் ஈடுபடும் போது எனக்கு துணையாக வரும் நாய்களை எனக்கு பிடிக்கும் என கிண்டலான முறையில் பதிவு செய்திருக்கிறார். நல்லவேளை 350 ரூபாய்க்கே ரேபிஸ் தடுப்பூசி கிடைக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.
தற்போது அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அடுத்த அடுத்த மாதங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். இவர் வழக்கம் போல ஓட்ட பயிற்சிக்கு செல்லும் போது ஒரு தெரு நாய் கூட்டம் அவரை துரத்தி இருக்கிறது. பின்னர் அவர் காலில் கடித்திருக்கிறது. உடனடியாக அங்கிருந்த மக்களின் வரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கின்றனர்.
அவருடைய இந்த பதிவின் கீழ் தெருநாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பலரும் பதிவு செய்துள்ளனர். ஒரு சிலர் நீங்கள் இந்த பிரச்சனைகளால் இந்தியாவில் இருந்து வெளியேறப் போகிறீர்களா என கேட்டுள்ளனர், அதற்கு பதில் அளித்துள்ள அவர் தான் இந்தியாவிலேயே இருக்க போவதாகவும் இங்கே நான் 100 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 879 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு ஸ்டார்ட் அப்களை நிறுவி இருக்கிறேன் என்றும் பதில் அளித்துள்ளார்..