latest

ஓரே நாளில் 40000 கோடி சம்பாதித்த கௌதம் அதானி.. இதெல்லாம் இவருக்கு மட்டும் தான் நடக்கும்..!!

[ad_1]

அதானி குழுமத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் தாறுமாறாக உயர்ந்து ஒரே நாளில் 40,000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பீட்டை சேர்த்துள்ளது. அதானி குழும பங்குகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்று அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று பதிவான உயர்வு என்பது அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டோட்டல் காஸ் நிறுவனங்களின் வலுவான காலாண்டு முடிவுகளால் ஏற்பட்டது. இக்குழுமத்தின் 10 பட்டியலிட்ட நிறுவனங்களில் பங்கு விலையின் உயர்வால் 40000 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.

ஓரே நாளில் 40000 கோடி சம்பாதித்த கௌதம் அதானி.. இதெல்லாம் இவருக்கு மட்டும் தான் நடக்கும்..!!

அதானி கிரீன் எனர்ஜி அதிரடி வளர்ச்சி
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் BSEயில் 14 சதவீதம் உயர்ந்து, intraday உச்சமாக ரூ.1,145ஐ தொட்டு, ரூ.1,113.05இல் முடிந்தது. இது 14,521 கோடி ரூபாய் சந்தை மதிப்பை சேர்த்தது. இந்த உயர்வு, நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகளால் ஏற்பட்டது.

அதானி டோட்டல் காஸ் உயர்வு
அதானி டோட்டல் காஸ் பங்குகள் 8.7 சதவீதம் உயர்ந்து intraday உச்சமாக ரூ.675ஐ எட்டி, ரூ.634.50இல் முடிந்தது. இது 1,468 கோடி ரூபாய் சந்தை மதிப்பை சேர்த்தது. எரிவாயு விநியோக துறையின் நிலையான வளர்ச்சி இந்த உயர்வுக்கு காரணமாக உள்ளது.

பிற அதானி குழும நிறுவனங்கள்
அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 2 சதவீதம் உயர்ந்து 5,592 கோடி ரூபாய் சந்தை மதிப்பை சேர்த்தது. அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் 3 சதவீதம் உயர்ந்து 8,500 கோடி ரூபாய் சேர்த்தது.

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் 5 சதவீதம் உயர்ந்து 5,592 கோடி ரூபாய் சந்தை மதிப்பை சேர்த்தது.

சிமென்ட் துறையில் அம்புஜா சிமென்ட்ஸ் 4,041 கோடி ரூபாய் சந்தை மதிப்பை சேர்த்தது. ACC 261 கோடி ரூபாய் சேர்த்தது. அதானி வில்மர் 936 கோடி ரூபாய், NDTV 33 கோடி ரூபாய், சங்கி இண்டஸ்ட்ரீஸ் 32 கோடி ரூபாய் சேர்த்தது.

மொத்த சந்தை மதிப்பு
அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 50000 கோடி ரூபாய் வரையில் சந்தை மதிப்பு உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் பல்வேறு பங்குகளின் தடுமாற்றம் காரணமாக 39,640 கோடி ரூபாய் உயர்வுடன் முடிந்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி காலாண்டு முடிவுகள்
செப்டம்பர் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிகர லாபம் 111 சதவீதம் உயர்ந்து ரூ.583 கோடியாக உள்ளது. மொத்த வருமானம் 4 சதவீதம் குறைந்து ரூ.3,249 கோடியாக இருந்தாலும், இந்த லாப உயர்வு முதலீட்டாளர்களை ஈர்த்தது. இந்த வளர்ச்சி, அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் வலிமையை உறுதிப்படுத்துகிறது.

அதானி டோட்டல் காஸ் காலாண்டு முடிவுகள்
அதானி டோட்டல் காஸ் செப்டம்பர் காலாண்டில் நிகர லாபம் 9 சதவீதம் குறைந்து ரூ.162 கோடியாக இருந்தாலும், உள்ளீடு எரிவாயு செலவு 26 சதவீதம் உயர்ந்துள்ளது, இந்த உயர்வும் விற்பனை வளர்ச்சியால் ஏற்பட்டது.

[ad_2]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *