அமேசான், மெட்டா பணிநீக்கத்திற்கு பின் இப்படியொரு காரணம் இருக்கா.. ஷாக் கொடுக்கும் GPU பின்னணி..!!


அமேசான் நிறுவனம் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது, இதேபோல் மெட்டா நிறுவனமும் ஒவ்வொரு 6 மாதமும் 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அதிரடி பணிநீக்கத்திற்கு பின் ஏஐ தான் காரணம் என கூறுகின்றனர், ஆனால் உண்மை வேறு.

இந்த பணிநீக்கத்திற்கு பின்னால் வியாபாரம் மோசமாக இருப்பதோ, அல்லது ஏஐ பயன்பாடு காரணமோ இல்லை. பண பிரச்சனை தான் முக்கிய காரணமாக உள்ளது.

அமேசான், மெட்டா பணிநீக்கத்திற்கு பின் இப்படியொரு காரணம் இருக்கா.. ஷாக் கொடுக்கும் GPU பின்னணி..!!

எவ்வளவு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு ஏஐ கட்டமைப்பு வசதிகள் தேவை, அதாவது இங்கு GPUகளை அதிகளவில் வாங்கி ஏஐ செயல்திறனை மேம்படுத்துவதற்கு மூலதனம் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை சேர்க்கவே அதிகளவில் பணிநீக்கம் நடக்கிறது என டெக் வல்லுனர்களும், நிதியியல் நிபுணர்களும் கூறுகின்றனர்.

GPU என்றால் என்ன?
GPU (Graphics Processing Unit) என்பது ஒரு சிறப்பு வகை கம்பியூட்டர் சிப் ஆகும். இது முதலில் கிராபிக்ஸ் (படங்கள், வீடியோக்கள்) செயலாக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, ஆனால் இப்போது பெரிய அளவிலான கணக்கீடுகளை விரைவாக செய்யப் பயன்படுகிறது.

AI (செயற்கை நுண்ணறிவு) மாடல்களில் பில்லியன் கணக்கான தரவுகளை ஒரே நேரத்தில் பயிற்றுவிக்கவும், கணக்கிடவும், கணிக்கவும் GPU தேவைப்படும். CPU ஒரு வேலையை ஒரு நேரத்தில் செய்யும், ஆனால் GPU ஆயிரக்கணக்கான சிறு பிராசசர்களைக் கொண்டு பல வேலைகளை இணைந்து விரைவாக செய்யும் திறன் கொண்டு உள்ளதால். AI சேவைக்கு GPU மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்போ விஷயத்திற்கு வருவோம்.

அமேசான் நிறுவனத்தின் கிளவுட் சேவை பிரிவான அமேசான் வெப் சர்வீசஸ் பிரிவு ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்கிறது, ஆனால் அதன் கம்பியூட்டிங் வசதியை விரைவாக மேம்படுத்த முடியவில்லை. இதற்கு பெரிய அளவிலான மூலதனம் தேவைப்படுவதால், அமேசான் நிர்வாகம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு GPUகளை வாங்க முடிவு செய்துள்ளதன் விளைவே இந்த பணிநீக்கம்.

அமேசான் GPU வாங்க மூலதனம் இல்லாததால் AWS வளர்ச்சி குறைந்தது. பங்குச்சந்தையில் இதை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

இதை அமேசான் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஹைப்பர்ஸ்கேலர் நிறுவனங்களும் இதேயே தான் செய்கிறது. மெட்டா நிறுவனமும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் 5 சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது.

அமேசான் ஊதிய செலவை குறைத்து மூலதன செலவுக்கு (capex) நிதியை சேர்க்கிறது. ஊதிய செலவை குறைத்து GPU வாங்கினால் நிதி நிலை மேம்படும், பங்கு விலை உயரும். இது டெக் துறையில் புதிய போக்கை உருவாக்கியுள்ளது.

இன்றைய ஏஐ உலகில் GPU தான் கோல்டு ரஷ் என கூறப்படுகிறது, இந்த மாற்றும் என்டர்பிரைஸ் AI ஏற்றுக்கொள்ளும் அளவு 50 சதவீத அளவை தொடும் வரையில் தொடரும் என கணிக்கப்பட்டு உள்ளது, தற்போது 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்திற்கு GPU உருவாக்கும் என்விடியா போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் பலன் பெரும், இதை நீங்க புதிய முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *