Amazon Layoff: இந்தியாவில் மட்டும் 1000 பேர் பணிநீக்கம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!!


உலகின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் கடந்த வாரம் 30000 டெக் – நிர்வாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியானது. இதில் ஒட்டுமொத்த டெக் துறையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது, காரணம் முந்தைய டெக் துறை பணிநீக்கத்தில் அதிகளவில் பணிநீக்கம் செய்த அமேசான் மீண்டும் 30000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது என்றால் மற்ற நிறுவனங்களும் பணிநீக்கத்தை துவங்குமா என்ற அச்சம் உருவானது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் 14,000 ஊழியர்களை மட்டுமே நீக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ள வேளையில், இந்தியாவில் 800 முதல் 1,000 ஊழியர்களை பாதிக்கும் என்று தெரிகிறது.

Amazon Layoff: இந்தியாவில் மட்டும் 1000 பேர் பணிநீக்கம்.. ஆடிப்போன ஐடி ஊழியர்கள்..!!

அமேசான் மற்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகளவில் தனது வர்த்தகத்திலும், நிர்வாகத்திலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக ஊழியர்கள் தேவை தொடர்ந்து குறைந்து வரும் காரணத்தாலும், செலவுகளைக் குறைக்கும் விதமாகவும் இந்த அதிரடி பணிநீக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளது அமேசான்.

டெக் துறையில் கடந்த 3-4 ஆண்டுகளாக அதிகளவிலான பணிநீக்கங்கள் நடக்க முக்கியமான காரணம் ஏஐ என கூறப்பட்டாலும், முழுமையான காரணம் இது மட்டும் இல்லாமல். கொரோனா தொற்று காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தாலும், நுகர்வோர் சந்தையில் அதிகப்படியான மாற்றம், ஆட்டோமேஷன் சேவைக்கான தேவை அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக டெக் நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்த்தனர்.

ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதும், பல சேவைகளுக்கான டிமாண்ட் குறைந்தது. இதோடு ஆட்டோமேஷன் சேவைகள் நிறுவனத்திற்கு பலன் அளிக்க துவங்கியது. இதேவேளையில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கராணமாக ஆட்டோமேஷன் செய்யப்படும் வேகம் அதிகரித்தது. இதன் விளைவாகவே தற்போது ஊழியர்களின் தேவை குறைந்து பணிநீக்கம் அதிகரித்துள்ளது.

இதேபோல் இந்த பணிநீக்கம் டெக் துறையில் மட்டும் தான் நடக்கிறதா என்றால் இல்லை, அனைத்து டிஜிட்டல் சேவை துறையிலும், உற்பத்தி துறை, ஆராய்ச்சி துறையில் கூட ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. இனி வரும் காலக்கட்டத்திலும் இத்தகைய பணிநீக்கம் தொடரும் என்று தான் அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் பீப்ள் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் டெக்னாலஜி பிரிவின் துணை தலைவர் Beth Galetti கூறுகையில், 2026ல் ஊழியர்களின் பணிநீக்கம் தொடரும் அதேபோல் முக்கியமான பிரிவுகளில் தேவைக்கு ஏற்ப ஊழியர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

பணிநீக்க திட்டம்
அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் 14,000 ஊழியர்களை நீக்கும் என்று அறிவித்துள்ள நிலையில் இந்நிறுவனத்தின் 350,000 டெக் மற்றும் நிர்வாக ஊழியர்களில் 4 சதவீதம் பேர் இதில் பாதிக்கப்பட உள்ளனர். இதன் ஒருபகுதியாக இந்தியாவில் 800-1,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவதாக ஈஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

2025 ஜூன் மாதம் அமேசான் சிஇஓ ஆண்டி ஜாசி, AI மூலம் நிறுவனத்தின் செயல்திறன் அதிகரிப்பால் ஊழியர் எண்ணிக்கை குறையும் என்று எச்சரித்திருந்தார். இதுதான் தற்போது நிறுவனத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நடந்து வருகிறது.

இதேபோல் டெஸ்லா முதல் அமேசான், கூகுள் வரையில் ஏஐ பயன்பாட்டின் காரணமாக நிறுவன செயல்பாட்டில் இருக்கும் பலக்கட்ட ஒப்புதல் முறையை நீக்க முயற்சி செய்து வருகிறது. இதனால் பல பணிகள் விரைவாக நடக்கும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டின் காரணமாக 2025ஆம் ஆண்டில் மட்டும் டெக் துறையில் சுமார் 91,700 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர் என்று layoffs fyi தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா ஆகியவை 10,000 ஊழியர்களை நீக்கியுள்ளன. இதில் முக்கியமாக TCS மட்டும் 20,000 ஊழியர்களை நீக்கி, AI தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க துவங்கியுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *