
கே.பாப்பாரப்பட்டி: `இந்த ரோட்டுல நடந்து வர்றதே நாளும் போராட்டமா இருக்கு!’ – சாலை வசதி கோரும் மக்கள் | K. Paparapatti residents demand repair of road they use daily
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட கே.பாப்பாரப்பட்டி கிராமத்தின் கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள தார்ச்சாலை மிகவும் சேதமடைந்து தார் எழும்பி குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவே பிரதான சாலையாக இருப்பதால் அன்றாடம் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வரும் மக்களும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று வரும் மாணவர்களும் இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப் பிரச்னை குறித்து அப்பகுதி மக்கள் பேசும்போது, “இந்தச் சாலை அமைத்து குறைந்தது பத்து வருடங்கள் ஆகிறது….