latest

வீட்டு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை.. 47% அதிகரிப்பு..!!

இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்த வீட்டு விற்பனை தேவை சற்று குறைந்திருந்தாலும், தென்னிந்தியாவின் 3 முக்கிய நகரங்களான ஹைதராபாத், பெங்களூரு மற்றும் சென்னை ஆகியவற்றில் குடியிருப்புச் சொத்துக்களின் விற்பனை ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 47 சதவீதம் உயர்ந்துள்ளதாக PropTiger நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களின் இந்த 3 நகரங்களிலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 38,644 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் விற்கப்பட்ட 26,284 யூனிட்களை…

Read More
ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலக பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் உலக முழுவதும் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தக் கூடிய ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி வரிகளை விதித்த வண்ணம் இருக்கிறார். இந்திய…

Read More

ஊழியர் தற்கொலை : ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் மீது வழக்குப்பதிவு!! நடந்தது என்ன?

பெங்களூரு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஓசூரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவி மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. ஓலா நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வால் செயல்பட்டு வருகிறார். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் தான் அரவிந்த் . கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஓலா நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்த…

Read More

தங்கம் விலை 400 டாலர் வரை குறையப் போகுது.. கலக்கத்தில் முதலீட்டாளர்கள்.. நிபுணர் எச்சரிக்கை..!!

சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை விரைவில் மாற்றத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக முன்னணி நகை மற்றும் முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். காமக்யா ஜூவல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மனோஜ் ஜா, தற்போதைய விலை ஏற்றம் தங்கத்தை ஒரு Bubble Zone-க்குள் தள்ளியுள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்து வெளியேறும் நிலை உருவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உச்சம் தொட்ட தங்கம் விலை : இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு…

Read More

தீபாவளி அதுவுமா மிடில் கிளாஸ் மக்களுக்கு பேரிடி..!! தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது . தீபாவளி பண்டிகை முன்னிட்டு தங்கத்தின் விலை குறையும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த சூழலில் சென்னையில் ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு 2000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது. இன்று தங்கம் விலை: தொடர்ந்து ஏற்றதிலேயே இருந்த தங்கம் தீபாவளியை தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு பேரதிர்ச்சி கிடைத்திருக்கிறது . ஒரே நாளில் சென்னையில் ஆபரண…

Read More

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசு தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருகிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தான் இந்த திட்டத்தின் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அந்த குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது . மகளிர் உரிமைத் தொகை வேண்டி புதிதாக விண்ணப்பம் செய்ய விரும்பக் கூடிய பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என தமிழ்நாடு…

Read More

தீபாவளி கொண்டாட்டம்: 3ஆவது ஆண்டாக ஊழியர்களை பரிசு மழையில் நனைய வைத்த முதலாளி!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம் . சில நிறுவனங்கள் பலவிதமான பரிசுகளை வழங்கி ஊழியர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விஐபி சூட்கேஸ் வழங்கி திக்கு முக்காட வைத்தது. மற்றொரு தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு காபி தயாரிக்கும் இயந்திரம், வெள்ளி பார்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது….

Read More

இதென்ன புது கூட்டணி

சினிமா தியேட்டர்களை காலி செய்து வரும் ஓடிடி தளங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் போது பல தடைகளை எதிர்கொண்டு வருகிறது. உதாரணமாக நெட்பிளிக்ஸ்-ஐ எடுத்துக்கொண்டால் இத்தளத்தில் கேமிங் அறிமுகம் செய்யப்பட்டு பல வகையில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களையும், வருமானத்தையும் பார்க்க முடியவில்லை. இதேபோல் அதிக வேக இணையம் உலகம் முழுவதும் கிடைத்திருக்கும் வேளையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதிலும் தேக்கம் அடைந்துள்ளது. இதே பிரச்சனை தான் அனைத்து டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி…

Read More

அமெரிக்காவை காப்பாற்றும் டேட்டா சென்டர்-கள்.. அப்போ இந்தியாவின் நிலைமை என்ன..?

டேட்டா சென்டர், இந்தியாவில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம். 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மக்களின் தரவுகளை இந்திய மண்ணிலேயே சேமிக்க வேண்டும் என்ற முக்கிய கட்டுப்பாட்டை விதித்தது மூலம் நாட்டில் டேட்டா சென்டர் தேவை அதிகரித்தது. ஆனால் அமெரிக்காவில் அந்நாட்டின் பொருளாதாரமே டேட்டா சென்டரை தான் நம்பியுள்ளது என்பது தெரியுமா..? அதிலும் குறிப்பாக 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் நடந்த விஷயங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது….

Read More
முடங்கிய AWS.. அமெரிக்காவில் Perplexity உட்பட பல்வேறு சேவைகள் பாதிப்பு..!!

முடங்கிய AWS.. அமெரிக்காவில் Perplexity உட்பட பல்வேறு சேவைகள் பாதிப்பு..!!

இன்றளவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவைகள் கிளவுட் அமைப்பில் தான் இயங்கி வருகிறது, இப்பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் கொடிக்கட்டி பறக்கும் வேளையில் இதன் சேவையில் ஏற்பட்ட கோளாறு தற்போது உலகளவில் பெரும்பாலான சேவைகள் முடங்கியோ அல்லது பாதித்துள்ளது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) சேவையில் ஏற்பட்ட பழுதால் ஏஐ தளமான பெர்ப்ளெக்சிட்டி, ஃபோர்ட்னைட், ஸ்னாப்சாட் போன்ற பிரபலமான ஆப்களும், பல்வேறு டிஜிட்டல் சேவை தளங்களும் செயலிழந்தன. அமேசான் வெப் சர்வீஸ்-ஐ நம்பி தான் பல பெரும்…

Read More