
தீபாவளி கொண்டாட்டம்: 3ஆவது ஆண்டாக ஊழியர்களை பரிசு மழையில் நனைய வைத்த முதலாளி!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இனிப்பு மற்றும் பல்வேறு பரிசுகளை வழங்குவதை நாம் பார்த்திருக்கிறோம் . சில நிறுவனங்கள் பலவிதமான பரிசுகளை வழங்கி ஊழியர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றன. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு விஐபி சூட்கேஸ் வழங்கி திக்கு முக்காட வைத்தது. மற்றொரு தனியார் நிறுவனம் ஒன்று தங்களுடைய ஊழியர்களுக்கு காபி தயாரிக்கும் இயந்திரம், வெள்ளி பார்கள் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியது….