டெல்லி: “உங்கள்திருமண ஆர்டருக்காக காத்திருக்கிறோம்” – திருமணம் செய்யும்படி ராகுல் காந்தியிடம் சொன்ன ஸ்வீட்கடைக்காரர் | Delhi Sweet shop owner who told Rahul Gandhi to get married

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார். அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார். இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி…

Read More

இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லாதீர்கள், வீட்டில் யோகா செய்யுங்கள் என்று கூறும் பா.ஜ.க எம்.எல்.ஏ | BJP MLA tells Hindu women not to go to gym, do yoga at home

மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் படல்கர் பெண்கள் உடற்பயிற்சிக்காக ஜிம் செல்வது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அவர் பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “‘கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் யோகா செய்ய வேண்டும். ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய செல்லும்போது அங்கு இருக்கும் பயிற்சியாளர் குறித்து உங்களுக்குத் தெரியாது. அவர் வேறு மதத்தைச்…

Read More