latest

“நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” – அமைச்சர் சக்கரபாணி

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில், கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ்கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே கொள்முதல்…

Read More

“காங்கிரஸ் கட்சியை மதித்தால் முதலமைச்சராக வர முடியும். இல்லையென்றால் முன்னாள் முதல்வராகவே இருக்க முடியும்.” – மாணிக்கம் தாகூர்

“2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா?” என்ற கேள்விக்கு? “யாருக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். இருந்த போதும், விருதுநகர் காமராஜர் பிறந்த மண் என்பதால், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எடுத்துரைக்கும்” என்றார். மாணிக்கம் தாகூர் “விருதுநகர் தி.மு.க கைவசம் உள்ளது. ஒரே மாவட்டத்தில் இரு தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமா?” என்ற கேள்விக்கு “எல்லாருக்கும் எல்லாத் தொகுதியிலும் போட்டியிட வேண்டுமென்ற ஆசை…

Read More

WTO-ல் இந்தியா மீது புகாரளித்த சீனா – ஏன்? | China complaints India over rules violation in WTO

“இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்’ என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா. இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் அட்வான்ஸ்ட் கெமிக்கல் செல் பேட்டரி ஸ்டோரேஜ் தயாரிப்புகள், ஆட்டோமொபைல் சார்ந்த உற்பத்திகள், பயணிகள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியாவிற்குள் தயாரிக்க ஊக்குவித்து இந்திய அரசு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம்…

Read More

“எங்க பகுதியில மழைநீர் தேங்கியிருக்கு வந்து பாருங்க என்கிறார்கள், ஆனால்'' – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலார்டுகள் விடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்த மழைக்கே சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. இந்த மழைக்காலத்தை சமாளிக்க முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொட்டித் தீர்த்த பருவமழை இதுகுறித்துப் பேசியிருக்கும் துணைமுதல்வர் உதயநிதி…

Read More

"கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் நான் அழுதது நாடகமா?" – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட சுற்றுப்பயணப் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர். சம்பவம் நடந்த இரவு பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “படிச்சு படிச்சு சொன்னோமே, கண்டிஷன பாலோ பண்ணுங்க, கண்டிஷன பாலோ பண்ணுங்கனு” என்று அழுத வீடியோ பெரும் வைரலாகி இருந்தது. இதை எதிர்க்கட்சியினர் பலரும் நாடகம் என்று விமர்சித்திருந்தனர். அன்பில்…

Read More

”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல”- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி

காட்டூர் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல் மணிகள் மட்டும் 2,000 மூட்டைகள் இருக்கும் எனத் தெரிவித்தனர். இது குறித்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்கிற பெண் விவசாயி, “என் கணவர் கூலி வேலை செய்கிறார். எனக்கு இரண்டு பிள்ளைகள். இளைய மகனுக்கு வாய் பேச வராது. ஏற்கெனவே பல சுமைகள் என்னை அழுத்தி வரும் நிலையில் 5 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து நடவு செஞ்சேன். பத்து நாளைக்கு முன்னாடியே அறுவடை செய்திருக்கணும். கொள்முதலில்…

Read More

Madurai : “கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்”/Anbil mahesh meet to press

அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றவரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் ‘கரூர் தவெக கூட்ட உயிரிழப்பு சம்பவத்தின்போது அழுததை எதிர்க்கட்சியினர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு “உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும், இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல,…

Read More

“நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது; விளைச்சலும் அமோகம் என்கிறார்கள் விவசாயிகள். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் சொல்கின்றனர். முன்கூட்டியே குறுவை அறுவடை பணியை தொடங்கியதால், அரசு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் சாக்கு பற்றாக்குறை, லாரி தட்டுப்பாடு, சேமிப்பு கிடங்குகளில் ஏற்கனவே இருந்த நெல்…

Read More

பீகார் தேர்தல்: யாதவர்களை கைவிட்டுவிட்டு மாற்று சமூகத்தின் உதவியை நாடும் பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் | Bihar elections: BJP, Janata Dal United seek help from other castes, abandoning Yadavs-

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துக்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை. சில தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரச்னைக்கு தீர்வு காண இன்று ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…

Read More