கொல்கத்தாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

கொல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா சென்னை அண்ணா சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி ஜிம் கானா கிளப் அருகே அண்ணா சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்த பயணியிடம் நடத்திய விசாரணையில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், மேற்கு…

Read More

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான் என்றார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 9-ஆவது நாளை எட்டியுள்ளது. பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் இன்று (ஆக. 26) ராகுல் காந்தி பேசியதாவது:…

Read More

விலை உயர்ந்த வாக்குரிமையைத் திருட அனுமதிப்பதா? பிரியங்கா

வாக்களிப்பதுதான் குடிமக்களின் விலை உயர்ந்த உரிமை, அதனை நாம் திருட அனுமதிப்பதா? என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது. @-தினப்புயல்

Read More

ஜம்மு – காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

ஜம்மு – காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கத்ரா பகுதியிலுள்ள வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக ஜம்மு – காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திற்குட்பட்ட கத்ரா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. வைஷ்ணவி தேவி கோயில் அருகே உள்ள குகைக்கோயிலில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கியதாக…

Read More

வாக்குத்திருட்டு குஜராத்தில் உருவானது, 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல் காந்தி | vote theft

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. இந்தப் பேரணி இன்று (ஆக. 26) 10வது நாளை எட்டியுள்ளது. பிகாரின் மதுபானி பகுதியில் தொண்டர்கள் மத்தியில் இன்று (ஆக. 26) ராகுல் காந்தி பேசியதாவது, ”நான் பொய் கூறவில்லை. என் முன்னால் இருக்கும் தரவுகளின் அடிப்படையிலேயே வாக்குத்திருட்டில் பாஜக ஈடுபடுகிறது எனக் கூறுகிறேன். அடுத்த 40 –…

Read More

விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான மின்னணு சாதனங்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில், தற்போது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. சிறப்பம்சங்கள் என்னென்ன? வயர் இல்லாத இயர்பட்ஸில் இதுவரை இல்லாத வகையில், அதிக பேட்டரி திறன் கொண்டது. 1000 முறை வரை சார்ஜிங்கில் எந்தவித மாற்றங்களுமின்றி பேட்டரி திறன் நீடிக்கும். @-தினப்புயல்

Read More

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

கேரள அரசியல் வரலாற்றில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னுதாரணமாக விளங்குவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷன் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தெரிவித்தார். அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன் ஜாா்ஜ், ராகுல் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினாா். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள காங்கிரஸ் பாலக்காடு தொகுதி எம்எல்ஏ ராகுல் மம்கூட்டத்தில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கோழிக்கோட்டில் செய்தியாளர்களுடன் அவர் பேசும்போது: “முதல்வர் அலுவலகத்திலேயே பாலியல் குற்றச்சாட்டுள்ள நபர்கள் இருப்பதாகவும்,…

Read More

ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார். ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்கோரி, நீதித்துறையின் மிக மூத்த உறுப்பினரிடமிருந்த வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து, அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். @-தினப்புயல்

Read More

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்டிய மனைவியை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவதற்காக எந்தக் காரணத்தை கணவன் விளக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென தில்லி உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கடந்த 2018-இல், தில்லியிலுள்ள ஒரு மருத்துவமனை வெளியே குடும்பத் தகராறில் தன்னுடன் இணக்கமாக வர மறுத்த மனைவியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று(ஆக. 26) தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான…

Read More

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகளை முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது, தலைநகரில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமாக பள்ளிப் பேருந்துகள் ஒரு பெரிய பிரிவை உருவாக்குகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் தில்லி சாலையில் செல்கின்றன….

Read More