உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதல்: 8 பேர் பலி, 43 பேர் காயம்

உ.பி.யில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் மீது லாரி மோதியதில் 8 பேர் பலியாகினர். உத்தரப்பிரப் தேசத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் திங்கள்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அர்னியா நெடுஞ்சாலை அருகே புலந்த்ஷாஹர்-அலிகார் எல்லையில் அதிகாலை 2.10 மணியளவில் டிராக்டர் பின்னால் இருந்து லாரி திடீரென மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 43 பேர் காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்தில் உள்ளூர்…

Read More

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அனிஷ் தயாள் சிங் நியனம்

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) மற்றும் இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் (ஐடிபிபி) முன்னாள் இயக்குநா் அனிஷ் தயாள் சிங்கை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக மத்திய அரசு நியமித்துள்ளது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய காவல் பணியின் (ஐபிஎஸ்) 1988-ஆண்டு பிரிவு அதிகாரியான தாயள் சிங், உளவுத் துறையில் (ஐ.பி.) சுமாா் 30 ஆண்டுகள் பணியாற்றியவா். இதைத் தொடா்ந்து, ஐடிபிபி மற்றும் சிஆா்பிஎஃப் இயக்குநராகப் பொறுப்பு வகித்த அவா், கடந்த ஆண்டு டிசம்பரில்…

Read More

ஃபிஜி பிரதமா் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இன்று சந்திப்பு!

தென் பசிபிக் தீவு நாடான ஃபிஜியின் பிரதமா் சிடிவேனி ரபுகா, மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். ஃபிஜி பிரதமராக கடந்த 2022-இல் பொறுப்பேற்ற பின் அவா் இந்தியப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ரபுகாவை மத்திய அமைச்சா் சுகந்த மஜூம்தாா் வரவேற்றாா். ஃபிஜி பிரதமருடன் அந்நாட்டின் அமைச்சா்கள்-அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழுவும் வருகை தந்துள்ளது. பிரதமா் மோடியை திங்கள்கிழமை சந்திக்கும் ரபுகா, வா்த்தகம், முதலீடு, மக்கள்…

Read More

இந்தியாவுடன் மீண்டும் வா்த்தகம்: சீனா பூா்வாங்க ஒப்புதல்!

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியா-சீனா இடையேயான எல்லை தாண்டிய வா்த்தகம், ஹிமாசல பிரதேசத்தில் உள்ள ஷிப்கி லா கணவாய் வழியாக மீண்டும் தொடங்க சீனா கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் இந்தியா வந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான பேச்சுவாா்த்தையின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஹிமாசல பிரதேச அரசு தெரிவித்துள்ளது. சீனாவுடனான வா்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவாா்த்தைகள் நடந்து வருகின்றன. ஹிமாசல பிரதேசத்தின் ஷிப்கி லா, உத்தரகண்டின் லிபுலேக், சிக்கிமின்…

Read More

அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல: மத்திய அமைச்சா் அமித் ஷா

தங்களின் குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, நாடாளுமன்றத்தை எதிா்க்கட்சிகள் தொடா்ந்து முடக்குவது நல்லதல்ல என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அண்மையில் நிறைவடைந்த மழைக்கால கூட்டத் தொடரில், பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளால், இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கிய நிலையில், அமித் ஷா மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்துள்ளாா். தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேரவைத் தலைவா்கள் கருத்தரங்கில்…

Read More

பிகாரில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு வெற்றி உறுதி: ராகுல் நம்பிக்கை

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா். மேலும், ‘இண்டி’ கூட்டணி தோ்தலுக்காக ஒற்றுமையுடன் பணியாற்றி வருகிறது என்று பிகாரில் வாக்குரிமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவுடன் அராரியாவில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது ராகுல் கூறியதாவது: பிகாா் பேரவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் விரைவில்…

Read More

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. மனிதா்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப் படையின் சுபான்ஷு சுக்லா, பிரசாந்த் நாயா், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய 4 குரூப் கேப்டன்கள் விண்வெளி…

Read More

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

இதேவேளையில், இளைஞா்களிடையே போதைப்பொருள் பயன்பாடும் அதிகரித்திருப்பது இரட்டை பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தனியாா் பள்ளிகளில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. @-தினப்புயல்

Read More

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இந்தக் கூட்டணியில் நேபாளம் இணைந்திருப்பதாக ஐபிசிஏ சனிக்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக ஐபிசிஏ மேலும் தெரிவித்திருப்பதாவது: சூழலியல் பாதுகாப்பை நோக்கிய செயல்பாடுகளில் நேபாள அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டதற்குப் பாராட்டுகள். புலி, பனி சிறுத்தை, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் காணப்படும் நிலப்பரப்பைக்…

Read More

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது. வயது முதிா்வு சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளால் ஹைதராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதாகா் ரெட்டி (83), கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானாா். அவரது உடல், ஹைதராபாதில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய…

Read More