
Category: இந்தியா
இந்தியா


முடங்கிய AWS.. அமெரிக்காவில் Perplexity உட்பட பல்வேறு சேவைகள் பாதிப்பு..!!
இன்றளவில் பெரும்பாலான டிஜிட்டல் சேவைகள் கிளவுட் அமைப்பில் தான் இயங்கி வருகிறது, இப்பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் கொடிக்கட்டி பறக்கும் வேளையில் இதன் சேவையில் ஏற்பட்ட கோளாறு தற்போது உலகளவில் பெரும்பாலான சேவைகள் முடங்கியோ அல்லது பாதித்துள்ளது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) சேவையில் ஏற்பட்ட பழுதால் ஏஐ தளமான பெர்ப்ளெக்சிட்டி, ஃபோர்ட்னைட், ஸ்னாப்சாட் போன்ற பிரபலமான ஆப்களும், பல்வேறு டிஜிட்டல் சேவை தளங்களும் செயலிழந்தன. அமேசான் வெப் சர்வீஸ்-ஐ நம்பி தான் பல பெரும்…

கோவா: கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி. | PM Modi Celebrates Diwali with Indian Navy, Declares India on Verge of Eradicating Maoism
பிரதமரின் பேச்சு “பாதுகாப்பு படைகளின் துணிச்சலாலும் வீரத்தால் நம் நாடு கடந்த சில ஆண்டுகளில் மற்றொரு இலக்கை எட்டியிருக்கிறது. இது மாவோயிசத்தைப் பற்றியது. மாவோயிசத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான விளிம்பில் நம் நாடு இருக்கிறது. 2014ம் ஆண்டு இந்தியாவில் 125 மாவட்டங்கள் மாவோயிசத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. இப்போது வெறும் 11 ஆகக் குறைந்திருக்கிறது. இதிலும் 3 மாவட்டங்களில் மட்டுமே அவர்களின் தாக்கம் இருக்கிறது. பாதுகாப்பு படையினர் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்சல் பாதிப்பிலிருந்து விடுதலைப் பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றன….

“அக்., 21-ம் தேதி பொது விடுமுறை” – தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அறிவிப்பு | TN govt announces general holiday diwali next october 21st
தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், அக்டோபர் 21-ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குப் பொது விடுமுறை அறிவித்து அதற்குப் பதில் அக்டோபர் 25-ம் தேதி வேலைநாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது…

“சம்பாதிச்சதை ஊருக்கு அனுப்ப முடியல” – மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்: இந்திய அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன? |Indians stranded in Maldives: What are their demands from the government?
கடந்த ஆண்டு 500 டாலரிலிருந்து 400 டாலர் (சுமார் ரூ.34,000) வரை மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யலாம் எனக் இரண்டாவது முறையாகக் குறைத்தது. தற்போது அதையும் குறைத்து, இந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து 150 டாலர் (சுமார் ரூ.13,000) வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும் எனக் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இதனால், இந்தியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்குப் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அஞ்சுகின்றனர். இது தொடர்பாக இந்திய அரசின் மாலத்தீவு இந்திய…

இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லாதீர்கள், வீட்டில் யோகா செய்யுங்கள் என்று கூறும் பா.ஜ.க எம்.எல்.ஏ | BJP MLA tells Hindu women not to go to gym, do yoga at home
மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களும் சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தற்போது சாங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. கோபிசந்த் படல்கர் பெண்கள் உடற்பயிற்சிக்காக ஜிம் செல்வது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அவர் பீட் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, “‘கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் யோகா செய்ய வேண்டும். ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய செல்லும்போது அங்கு இருக்கும் பயிற்சியாளர் குறித்து உங்களுக்குத் தெரியாது. அவர் வேறு மதத்தைச்…

“இந்தியா விதிமுறைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால்” – இந்தியா மீது பாயும் அதிபர் ட்ரம்ப் | “If India doesn’t agree to the terms” – President Trump lashes out at India
இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், “இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார்” என்றார். ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, “அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார். அப்படி எதுவும்…

Chennai Metro: “சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான வாடிக்கையாளர் திருப்தி 5-க்கு 4.3” – சென்னை மெட்ரோ அறிவிப்பு| Study results in which 32 metro rail companies Chennai Metro ranks first
மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும். COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality), அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability), நம்பகத்தன்மை…

தீபாவளி: “பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது” – சென்னை மாநகராட்சி | Diwali: “Firecracker waste should not be thrown in the garbage bin” – Chennai Corporation
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதையொட்டி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென நேரக் கட்டுப்பாடு உள்ளது. எனவே, பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை மட்டுமே வெடிப்பது நல்லது. சென்னை மாநகராட்சி பட்டாசு கழிவுகளை…
