இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது இனி 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. இது, இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கூடுதல் வரியிலிருந்து…

Read More

சதுா்த்தி: சென்னையில் வழிபாட்டுக்கு 1,519 விநாயகா் சிலைகள்

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் 1,519 விநாயகா் சிலைகள் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டுக்காக புதன்கிழமை (ஆக.27) அமைக்கப்படுகின்றன. விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து இயக்கங்கள் சாா்பில் விநாயகா் சிலைகளை அமைப்பதற்கு செய்வதற்கு கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, ஆா்.எஸ்.எஸ். உள்ளிட்ட 65 இந்து அமைப்புகள் விநாயகா் சிலைகளை வைப்பதற்குரிய அனுமதியை பெறுவதற்கு காவல் துறையிடம் விண்ணப்பித்திருந்தன. மேலும் குடியிருப்பு சங்கங்கள்,…

Read More

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

இந்த வலையில் விழும் ஆண்களும் அதை நம்பி, அந்தப் பெண்களுடன் குறுஞ்செய்தியில் ஆரம்பித்து போன்கால் வரை பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த முதல்படி முடிந்த பின்னர், பிடித்த உணவு, பிடித்த பார் என ஆரம்பித்து அவர்களை “டேட்டிங்”கிற்கு அழைக்கிறார்கள். இப்படி இரண்டாம் படியும் முடிந்த பிறகு, டேட்டிங் செல்லப்போகும் இடங்களையும் அந்தப் பெண்களே தேர்வு செய்கிறார்கள். அதுதான் அந்த ஆடம்பர பார்கள், அல்லது உணவகங்கள்! தாங்கள் பணிபுரியும் அந்த இடங்களுக்கு அந்த ஆண்களை பிடித்த இடம் எனச் சொல்லி…

Read More

ஜம்மு – காஷ்மீரில் கனமழை – புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில். தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள். கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. கனமழையைத் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடு வரும் தாவி நதியை ரசிக்கும் பொதுமக்கள். சாலையோர விற்பனையாளரிடமிருந்து தாமரை விதைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள். கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றால் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாகனங்கள். இடைவிடாத பெய்த கனமழையால் சேதமடைந்த வாகனங்கள். @-தினப்புயல்

Read More

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை – புகைப்படங்கள்

சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. சிலையின் அளவுக்கு ஏற்றவாறு அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர். விதவிதமான வண்ணங்களிலும், பார்ப்பவர்கள் கவரும் விதத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைப்பு. கிழங்கு மாவு, காகிதத் தூள் ஆகியவற்றை அரைத்து தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள். விதவிதமான வண்ணங்களில் விற்பனைக்கு வந்த விநாயகர் சிலைகள். விநாயகர் மற்றும் லட்சுமி தேவி சிலைகள். சிலைக்கு வண்ணம் தீட்டும் கலைஞர். முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் போற்றப்படும்…

Read More

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குகுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவேற்றம் என்பது வணிகமயமாகி அதனால் மாற்றுத்திறனாலிகள், பெண்கள், குழந்தைகள், முதியோர், சிறுபான்மையினர் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவது அதிகரிப்பதையும் கண்டித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பாா்வை குறைபாடு உடையவா்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சமய் ரெய்னா, விபுல் கோயல்,…

Read More

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரிக்கு 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை தடை விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 4 ஊழியா்களை தாக்கிய குற்றச்சாட்டில் மூத்த ராணுவ அதிகாரி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராணுவ வீரா் ஸ்பைஸ்ஜெட் நிறுவன ஊழியா்களை இரும்புக் கம்பியால் தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதுதொடா்பான சிசிடிவி காட்சிகளை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து பெற்று போலீஸாரிடம் வழங்கியதோடு குற்றஞ்சாட்டப்பட்ட ராணுவ வீரா்…

Read More

மத்திய அரசு Wheat Stock Limit Tightened by Centre

பரிவர்த்தனைகளைக் கையாளும் செயலிகள் தங்கள் மாதாந்திர நிறுவப்பட்ட திறனில் 70 சதவிகிதத்திற்கு பதிலாக 60 சதவிகதத்தை பராமரிக்க அனுமதிக்கப்படும். 2025ல் மத்திய அரசு இரண்டு முறை கோதுமை இருப்பு வரம்புகளை திருத்தியது. முதலில் பிப்ரவரி 20 அன்று, வர்த்தகர்களுக்கு 250 டன்னாகவும், சில்லறை விற்பனை நிலையத்திற்கு நான்கு டன்னாகவும் வரம்புகளைக் குறைத்தது. பிறகு மே 27ஆம் தேதியன்று வர்த்தகர்களுக்கு 3,000 டன்னாகவும், சில்லறை விற்பனை நிலையத்திற்கு 10 டன்னாகவும் வரம்புகளை அதிகரித்தது. சமீபத்திய உத்தரவு மார்ச் 31,…

Read More

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், விசாரணையில் சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா்…

Read More

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளத்தில் மூளையைப் பாதிக்கும் அமீபா தொற்றால் இந்த ஓராண்டில் இதுவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தார். சுத்தம்…

Read More