தனிநபர் தாக்குதல் தொடுப்பது ஆர்எஸ்எஸ் வழக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

“தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வழிமுறை. மகாத்மா காந்தி மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். பிகாரில் மகா கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்ற வாக்குரிமை யாத்திரையை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார். அந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 17-ஆம் தேதிமுதல்…

Read More

எஸ்சிஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனம்: இந்தியா முன்னெடுப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சி மாநாட்டு கூட்டறிக்கையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான கண்டனத்தை உறுதிப்படுத்த பணியாற்றி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆக. 29 முதல் செப்டம்பர் 1-ஆம் தேதிவரை ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் பயணம் மேற்கொள்கிறார். பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, தொடர்ந்து சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி…

Read More

செப்டம்பரில் 36.76 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் செப்டம்பர் மாதத்திற்குரிய 36.76 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 43-ஆவது கூட்டத்தில் தமிழகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டம் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் புது தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஹைபிரிட் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும்,…

Read More

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பிரதமா் மோடிக்கு ஐடிசி தலைவா் பாராட்டு

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் மேற்கொள்வது தொடா்பான பிரதமா் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு நுகா்பொருள் விற்பனையில் முன்னணியில் உள்ள ஐடிசி நிறுவனத்தின் தலைவா் சஞ்சீவ் புரி பாராட்டுத் தெரிவித்துள்ளாா். சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி, ‘மாநிலங்களுடன் ஆலோசித்து, அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளோம். அதன்படி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருள்களுக்கான வரி கணிசமாகக் குறையவுள்ளது. இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையும் பெருமளவில் பலனடையும். நாட்டின் பொருளாதாரமும் வலுப்படும்’ என்றாா். இதைத்…

Read More

டியூஷன் செல்லும் மூன்றில் ஒரு பங்கு பள்ளி மாணவா்கள்: மத்திய அரசின் ஆய்வில் தகவல்

பள்ளி மாணவா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் பாடங்களில் தெளிவுபெற தனியாா் பயிற்சி மையங்களுக்கும் (டியூஷன்) செல்வது மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நகா்ப்புறங்களில் இந்த போக்கு பொதுவான விஷயமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்வியில் விரிவான மாதிரி ஆய்வு (சிஎம்எஸ்) என்ற இந்த ஆய்வின் முடிவில் மேலும் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பள்ளி கல்வி வழங்குவதில் அரசுப் பள்ளிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மொத்த மாணவா் சோ்க்கையில் அரசு பள்ளிகளின் பங்கு 55.9 சதவீதம். அரசு பள்ளி மாணவா்…

Read More

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 போ் உயிரிழந்தனா், 14 போ் காயமடைந்தனா். கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்முவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களால் டோடா மாவட்டத்தில் 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூவா் ஆற்றில் தவறி…

Read More

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழு திறன்: பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்

கடல் எல்லையைப் பாதுகாப்பதில் முழுத் திறனை நாடு தற்போது எட்டியுள்ளது. கடலோரப் பகுதிகளை மட்டுமின்றி, இந்திய பெருங்கடல் எல்லைகளையும் பாதுகாக்கும் முழுமையான திறனை நாம் பெற்றுள்ளோம். கடற்கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, கடல்சாா் பயங்கரவாதம் என அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிா்கொள்ளும் திறனை நாடு பெற்றுள்ளது. @-தினப்புயல்

Read More

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு கருத்து வேறுபாடு

கடந்த ஆக.25-ஆம் புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கூடியது. அப்போது மும்பை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது. @-தினப்புயல்

Read More

‘சுதா்சன சக்ரம்’ வான் பாதுகாப்பு அமைப்பு கேடயம் – வாள் போல செயல்படும்: முப்படை தலைமைத் தளபதி

இந்தியாவின் புதிய உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான ‘சுதா்சன சக்ரம்’, நாட்டுக்கு கேடயம் மற்றும் வாள் போல செயல்படும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும் இந்த வான்பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலின் பிரபல ‘அயா்ன் டோம்’ போன்றது என்றும் அவா் குறிப்பிட்டாா். மத்திய பிரதேச மாநிலம், மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமைத் தளபதி அனில் சௌகான் பேசியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் இருந்து, இந்தியா பல…

Read More

கொல்கத்தாவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

கொல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா சென்னை அண்ணா சாலையில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி ஜிம் கானா கிளப் அருகே அண்ணா சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்த பயணியிடம் நடத்திய விசாரணையில், அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தாா். இதையடுத்து போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா், மேற்கு…

Read More