latest

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' – மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ‘இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்’ என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்… சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியையும் விதித்தது. ட்ரம்ப் எச்சரிக்கை கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கும் விதமாக நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் “சீனா நம் மீது அதிக மரியாதையைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் வரி மூலம் நமக்கு…

Read More

Trump: ‘புதின் உக்ரைனை கைப்பற்றிவிடுவார்’ – ஜெலன்ஸ்கியை மிரட்டும் ட்ரம்ப்|Trump reflects Putin thoughts in Zelensky Meeting

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம், “புதின் இதைப் போர் என்று குறிப்பிடவில்லை… ஸ்பெஷல் ஆபரேஷன் என்றே கூறுகிறார். புதின் நினைத்தால் உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம். புதின் கூறும் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். இந்தச் சந்திப்பில் ட்ரம்ப் பெரும்பாலும் புதினுக்கு ஆதரவாகவே பேசியுள்ளார். இது அவர் முன்பு பேசிய போன்காலின் பிரதிபலிப்பே என்றும் கூறுகிறார்கள்.

Read More

H1B Visa: யாரெல்லாம் 1 லட்சம் டாலர்கள் கட்ட வேண்டியதில்லை?|America clarifies who don’t want to pay 1 lakh dollar for H-1B visa?

புதிதாக ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்களும், ஹெச்-1பி விசா காலக்கெடு முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும். இப்போது செல்லுபடி ஆகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் யாரும் செய்ய இயலாத பணிக்காக, வெளிநாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்தால், அவர்களுக்கு ஹெச்-1பி விசா கட்டணம் இல்லை. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ – வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு

புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று, காவல் துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறை. இந்த நிலையில் காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகளின் இல்லங்களுக்கும் கணிசமான அளவுக்கு போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்குச் சென்று விடுவதால், திணறிக் கொண்டிருக்கிறது புதுச்சேரி காவல்துறை. ரோந்துப் பணியில் புதுச்சேரி போலீஸார்  இப்படியான சூழலில், பண்டிகைக்…

Read More
ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

ஏற்கனவே தங்கம் விலை தாறுமாறா ஏறுது!! இதுல இந்த டிரம்ப் வேற அடுத்த பிரச்சினையை கிளப்புறாரே!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாள்தோறும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உலக பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கிறார். டிரம்பின் வர்த்தக நடவடிக்கைகள் உலக முழுவதும் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி நகர வைத்திருக்கிறது. இதனால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலையை மேலும் உயர்த்தக் கூடிய ஒரு அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி வரிகளை விதித்த வண்ணம் இருக்கிறார். இந்திய…

Read More

பாஜக முன்னாள் எம்.பி “பெண்களின் காலை உடையுங்கள்” என பேச்சு| Pragya Singh Thakur Sparks Outrage for Urging Parents to ‘Break Daughters’ Legs’ Over Interfaith Visits

உங்கள் குழந்தைகளின் நன்மைக்காக அவர்களை அடிக்க வேண்டியிருந்தால் அதிலிருந்து பின்வாங்காதீர்கள். பெற்றோர்கள் அப்படிச் செய்வது குழந்தைகளின் நன்மைக்காகத்தான். அவர்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுவதிலிருந்து காப்பதற்காக” எனப் பேசியுள்ளார் அவர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டுள்ளது. மேலும் அதில், “மதிப்புகளைப் பின்பற்றாத, பெற்றோரின் பேச்சைக் கேட்காத, பெரியவர்களை மதிக்காத பெண்கள் வீட்டை விட்டு ஓடிப்போகத் தயாராக இருப்பவர்கள்… அவர்களைக் கண்காணியுங்கள்” என்றும் கூறியுள்ளார். பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்வினையாற்றியுள்ளனர்.

Read More