மேலும், “நடந்த சம்பவம் பெருமைக்குரியதாக மாற்றப்படுகிறது… இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க நீதிமன்றத்துக்கு போதுமான அதிகாரம் உள்ளது.” என்றும் கூறினார்.
விகாஸ் சிங்கின் வாதத்தைக் கேட்ட நீதிபதி சூர்யா காந்த், “கிஷோர் செய்தது கடுமையான குற்றவியல் அவமதிப்பு… ஆனாலும் நீதிபதி ஏற்கனவே மன்னித்த நிலையில், நீதிமன்றம் இதைத் தொடர வேண்டுமா” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விகாஸ் சிங், “நீதிபதி அவரை மன்னித்ததாகக் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு மட்டுமே. நீதித்துறையின் சார்பானது அல்ல… மக்கள் இதைக் கூறி நகைக்கின்றனர்… அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அவரை சிறைக்கு அனுப்புங்கள்.” எனக் காட்டமாக பதிலளித்தார்.

கைவிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கை
காலணி வீசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பாத சூழலில் வேறு அமர்வுகள் நடவடிக்கை எடுப்பது சரியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதி ஜோய்மல்யா பக்சி, “அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை சம்பந்தபட்ட நீதிபதியின் விருப்பத்துக்கே விட்டுவிடலாம்” எனக் கூறினார்.
