latest

பட்டாசை விட வேகமாக விற்று தீர்ந்த மதுபானங்கள்!! டாஸ்மாக் புதிய சாதனை!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த முறை திங்கட்கிழமை நாளில் தீபாவளி பண்டிகை வந்ததால் பொதுமக்கள் சனி ,ஞாயிறு , திங்கள் ஆகிய மூன்று நாட்களும் பண்டிகையை கொண்டாட கூடிய வாய்ப்பு கிடைத்தது .

தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமையும் அரசு பொது விடுமுறையாக அறிவிப்பு வெளியிட்டதால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் என்பது நான்கு நாட்களாக விரிவடைந்தது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர் . அனைவரும் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

பட்டாசை விட வேகமாக விற்று தீர்ந்த மதுபானங்கள்!! டாஸ்மாக் புதிய சாதனை!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

இந்த தீபாவளி பண்டிகை தமிழ்நாடு அரசுக்கு பெரிய அளவிலான வருவாயும் ஈட்டி தந்திருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை களைகட்டி இருக்கிறது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் என மூன்று நாட்களில் மட்டும் சுமார் 790 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனம் 4,787 கடைகள் வாயிலாக பல்வேறு வகையான மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த கடைகளில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் , பண்டிகை காலம் வந்து விட்டாலே அதிக அளவு மதுபானங்கள் விற்பனையாகும். இந்த முறை தீபாவளி பண்டிகையொட்டி விற்பனை பெருமளவில் களைகட்டி இருக்கிறது.

Also Read

பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா? BMW கார் வாங்க டெண்டர்.. சர்ச்சையில் லோக்பால் அமைப்பு!!

ஜிஎஸ்டி வரி குறைப்பு , போனஸ் கிடைத்தது என மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்ததால் குடிமகன்கள் தீபாவளியை மிக உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். சனிக்கிழமை தொடங்கி ஞாயிறு , திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை தீவிரமடைந்திருக்கிறது. சனிக்கிழமை 18ஆம் தேதியிலிருந்து மதுபான விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது அன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 230.66 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்ததாக 19ஆம் தேதி அன்று 293.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.

Recommended For You

இந்த தீபாவளியை விடுங்க அடுத்த தீபாவளிக்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்க இந்த டிரிக் போதும்!!

தீபாவளி பண்டிகை நாளில் 256 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது . இந்த மூன்று நாட்களில் மட்டும் மொத்தமாக 789.85 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரையில் தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. 171 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன .அடுத்ததாக சென்னை மண்டலத்தின் 158 கோடி ரூபாய்க்கும் திருச்சியில் 157 கோடி ரூபாய்க்கும் கோவையில் 150 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது தமிழ்நாட்டில் மதுபான விற்பனையின் மதிப்பு 650 கோடி ரூபாயாக இருந்தது இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக 140 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *