உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

Delimitation: 'திமுகவை அம்பலப்படுத்துங்க' – உத்தரவிட்ட முதல்வர்; களத்தில் இறங்கும் தவெக அமைச்சர்கள்?

தினப்புயல் • • 11 நிமிடங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
Delimitation: 'திமுகவை அம்பலப்படுத்துங்க' – உத்தரவிட்ட முதல்வர்; களத்தில் இறங்கும் தவெக அமைச்சர்கள்?
வாசிப்பு
Facebook Telegram

மத்திய பாஜக அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் 'சாதனை வெற்றி விளக்கக் கூட்டம்' என்ற பெயரில் ஒரு கூட்டம் அவசர அவசரமாகத் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

உண்மையில் முதல்வர் தரப்பின் உத்தரவின் பேரில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவை அம்பலப்படுத்தவே இந்தக் கூட்டம் என்கின்றனர்.

.

பாஜக அரசின் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே திமுக சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழியின் தலைமையில் ஒரு குழுவினர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தனர்.

.

இந்நிலையில்தான் தவெக சார்பில் ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எழும்பூரில் இன்று மாலை 3:30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், அருண்ராஜ், வெங்கட்ரமணன், மரிய வில்சன், குமார் போன்றோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

'இன்று காலை 8 மணிக்குத்தான் இப்படியொரு கூட்டம் நடத்தவிருப்பதாக எங்களுக்கே தகவல் கூறினர்' என்கின்றனர் தவெகவின் சென்னை எம்.எல்.ஏக்களும் மாவட்டச் செயலாளர்களும்.

எதற்காக இவ்வளவு அவசரமாக ஒரு கூட்டமென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம், ''முதல்வர் விஜய் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்றே பேசி வந்தார். குறிப்பாக YMCA மைதானத்தில் நடந்த கடைசி பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் முடிந்தவுடன் திமுக அமித்ஷாவிடம் சரணடையும் என்றும் பேசியிருந்தார்.

.

திமுக, பாஜகவை நெருங்குகிறது என்பதை அறிந்துதான், முதல்வர் தொகுதி மறுவரையறையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு செக் வைக்க நினைத்தார். திமுக அப்போது தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து நழுவிவிட்டது.

அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ், 'எல்லா மாநிலத்துக்கும் 50% இடம் உயர்வு என்றாலும் திமுக அந்த மசோதாவை ஆதரிக்கக்கூடாது' என்றார். திமுகவின் சீனியர்கள் அதை ஆமோதித்தனர். இப்போது அப்படியே யூடர்ன் அடித்து மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியதோடு அமித்ஷாவையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

டெல்லியில் நடந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான், 'திமுகவை அம்பலப்படுத்துங்கள். இது நாம் ஸ்கோர் செய்ய வேண்டிய நேரம்' என முதல்வர் தரப்பிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதன்பிறகுதான் அமைச்சர்கள் தலைமையில் அவசர அவசரமாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

திமுக, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாகவும், பாஜகவிடம் அடிபணிந்துவிட்டதாகவும் அமைச்சர்கள் காட்டமான விமர்சனங்களை முன்வைக்க வாய்ப்பிருக்கிறது'' என்றனர்.

ஆட்டம் சூடுபிடிக்குது!

.“மாநில உரிமைகளை இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக" – எம்.பி கனிமொழி

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →