உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா புதுப்பிப்பு

Delimitation: "இது வாழ்வா, சாவா போராட்டம்; அதனால்…" – சந்திப்புக்கு பிறகு ஸ்டாலினின் முடிவு என்ன?

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
Delimitation: "இது வாழ்வா, சாவா போராட்டம்; அதனால்…" – சந்திப்புக்கு பிறகு ஸ்டாலினின் முடிவு என்ன?
வாசிப்பு
Facebook Telegram

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் அனைவரும் இன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க வந்திருந்தனர்.

.

நாளை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக இந்தச் சந்திப்பு நடந்தது.

இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை சித்தரஞ்சன் சாலையிலுள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது.

இன்று காலை, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி போட்ட பதிவிற்கு, மு.க. ஸ்டாலின், "வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனப் பதில் தந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலினை நேரில் சந்திக்க வந்த இந்தியா கூட்டணித் தலைவர்களை வாசலில் நின்று வரவேற்றார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பு சற்று முன் முடிவடைந்தது.

.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், "ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கே, தோழர் பேபி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று மாலை என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான அவர்களுடைய கோரிக்கைகளை என்னிடம் வலுயுறுத்தி சொன்னார்கள்.

நேற்று, திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற வேளையில், இந்தப் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னேன். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டாலும், வேறு சில பிரச்னைகளைப் பற்றியெல்லாம் பேசினார்கள்.

நாங்களும் அதைக் கேட்டுக் கொண்டோம். இப்போது கொண்டு வரப்படக்கூடிய மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டிற்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட இழந்துவிடுவோம் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

.

டிலிமிடேஷன் கமிஷனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களும் வஞ்சிக்கப்படும். அதை யார் நினைத்தாலும், தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. அரசியல் சட்டத்தில் இருக்கும் நிலை அதுதான்.

அதை மாற்றுவதற்கான அரசியல் வலிமையோ, 2/3 பங்கு நாடாளுமன்ற வலிமையோ நம்மிடம் இல்லை. 1971-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பிற்குப் பதில், அதற்கு பிறகு நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை நடந்தால், தமிழ்நாடு பாதிக்கப்படும்.

இப்போது இருக்கக்கூடிய எம்.பி-களின் சதவீதம் குறையும். இது தென்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம்தான். அதைத் தடுக்க, இப்போது கொண்டு வரப்படும் மசோதவை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை.

இப்போது என்னைச் சந்தித்த கட்சியினரிடமும் வேறு திட்டம் இல்லை" என்றவர் கூட்டணி நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, "அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்களுக்கு தமிழ்நாடுதான் ஃபர்ஸ்ட்" எனப் பதிலளித்தார்.

.Delimitation: 'தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன்?' – எடப்பாடி பழனிசாமி விளக்கம்

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →