உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' – நெகிழும் சு.வெ

தினப்புயல் • • 3 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' – நெகிழும் சு.வெ
வாசிப்பு
Facebook Telegram

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகளால் தடுப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 10 நாட்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த அவரை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் தொடர் தலையீட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 1-ஆம் தேதி அவர் பாதுகாப்பாக மதுரை வந்து சேர்ந்தார்.

.

மாணவியை மீட்க உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை நேரில் சந்தித்து எங்கள் உயிர் இருக்கும் வரை உங்களை மறக்க மாட்டோம் என்று பெற்றோர் நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

.ரோலக்ஸ் : 'ஹீரோவா… வில்லனா… லோகேஷை வந்து என்னைப் பார்க்க சொல்லுங்க.!' – சூர்யாவின் பதில் .

இந்நிலையில் இதுதொடர்பாக எம்.பி சு.வெங்கடேஷன் வெளியிட்டிருக்கும் பதிவில், " ரஷ்ய தூதரகம், இந்திய தூதரகம், வெளியுறவுத்துறை அமைச்சகமென எல்லோரும் கைவிரித்த நிலையில்… முகாமில் சிக்கிய மாணவியால் என்ன செய்ய முடியும்? எல்லா நிறுவனங்களும் உண்மைக்கு செவிசாய்க்க மறுத்த பின்னும், நாங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்தோம். கடந்த ஆறு நாட்களாக எங்கள் எம்.பி அலுவலகத் தோழர்கள் இரவு பகலாகப் போராடினார்கள். இறுதியில்… மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம்!

.

அந்தத் தாய் எங்களை நோக்கிச் சொன்ன பெரிய வார்த்தைகள், அவர் தனது மகள் குறித்த தவிப்பின் வெளிப்பாடுதான். நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றும் எளிய மனிதர்கள். அந்தத் தாயின் மதிப்புமிக்க வார்த்தைகளைப் பெற்றது எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பரிசு. அன்பின் கண்ணீர் எங்கள் மக்கள் பணிக்கு நிகரற்ற வலிமையைச் சேர்க்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →