[ad_1]
தங்கத்தில் முதலீடு என்றாலே தங்க நகை தான் வாங்க வேண்டும் என இல்லை தங்க நகைக்கு மாற்றான அதிகம் லாபம் தரும் முதலீடுகளும் இருக்கின்றன என்ற விழிப்புணர்வு தற்போது மக்களிடையே பரவலாக காணப்படுகிறது . அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் கணிசமான லாபம் பார்க்க வேண்டும் என்பவர்களுக்கு கோல்டு ஈடிஎஃப் மற்றும் கோல்டு மியூச்சுவல் ஃபண்டு ஆகிய இரண்டு திட்டங்களும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன.
தற்போது தங்கம் விலை இறங்கி இருக்கிறது முதலீடு செய்வதற்கு உகந்த ஒரு தருணமாக இது மாறி இருக்கிறது . இத்தகைய சூழலில் கோல்டு ஈடிஎஃப்பில் முதலீடு செய்யலாமா அல்லது கோல்ட் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. முதலில் கோல்டி ஈடிஎஃப் என்றால் என்ன, கோல்டு மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசம் , எது கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் லாபம் தந்துள்ளது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம் .

கோல்டு ஈடிஎஃப்: கோல்டு ஈடிஎஃப் என்பது Exchnage traded funds ஆகும். அதாவது நிறுவனங்கள் தங்கம் வாங்கி அதனை டிஜிட்டல் முறையில் ஈடிஎஃப்-களாக நமக்கு பங்குச்சந்தையில் கொடுக்கும். அதாவது டிஜிட்டல் வடிவத்தில் தங்கம் என கொள்ளலாம். இங்கே ஒரு கிராம் என்பது ஒரு யூனிட் ஆகும். பிசிக்கல் தங்கம் விலை ஏறினால் ஈடிஎஃப் மதிப்பும் உயரும். பங்குச்சந்தையில் இது வர்த்தம் செய்யப்படுகிறது.
ஈடிஎஃப்கள் பகுதி அளவு மேலாண்மை செய்யப்படும் ஃபண்டு என்பதால் இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ இல்லை, ஆனால் இதில் புரோக்கரேஜ் கட்டணம் உண்டு மேலும் டீமேட் கணக்கு இதற்கு கட்டாயம் தேவை. பங்குகளை போலவே விலை ஏறும் இறங்கும் லட்சக்கணக்கானவர்கள் வாங்குவார்கள் லட்சக்கணக்கானவர்கள் விற்பனை செய்வார்கள். உதாரணமாக தங்கம் விலை 5 சதவீதம் உயர்கிறது என்றால் ஈடிஎஃப் மதிப்பும் 5% உயரும் , விலை குறைந்தால் ஈடிஎஃப் மதிப்பும் குறையும்.
கோல்டு மியூச்சுவல் ஃபண்டு: மற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை போலவே இது ஒரு தீம் அடிப்படையிலான ஃபண்டு. அதாவது நாம் செய்யும் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் தங்க நகை நிறுவனங்களின் பங்குகள், ஈடிஎஃப்கள் , தங்கம் சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வார்கள்.
எஸ்ஐபி முறையில் இது மாதந்தோறும் முதலீடு செய்யலாம். தங்கம் விலை ஏறும் போது தங்கம் சம்பந்தப்பட்ட பங்குகள் மதிப்பு உயரும் அந்த சமயத்தில் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளின் என்ஏவி-யும் உயரும். கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு டீமேட் கணக்கு தேவையில்லை. இவை தீவிரமாக மேலாண்மை செய்யப்பட வேண்டியவை என்பதால் இதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அதிகமாக இருக்கும்.
கோல்டு ஈடிஎஃப் , கோல்டு மியூச்சுவல் ஃபண்டு ஆகிய இரண்டிலுமே நாம் செலுத்தும் பணத்தில் 99% தங்கத்தில் தான் முதலீடு செய்யப்படும் அதாவது செய்கூலி சேதாரம் , நகையை பாதுகாக்க வேண்டும் என்ற அச்சம் நமக்கு தேவையில்லை. முதலீட்டில் தொடக்க நிலையில் இருப்பவர்கள் கோல்டு மியூச்சுவல் ஃபண்டிலும், சற்று முதலீட்டில் அனுபவம் கொண்டவர்கள் கோல்டு ஈடிஎஃப்களிலும் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கோல்டு ஈடிஎஃப், கோல்டு மியூச்ச்சுவல் ஃபண்டு ஆகிய இரண்டுமே சராசரியாக ஆண்டுக்கு 14 சதவீதம் வரை லாபம் தந்திருக்கிறது என ரித்திசித்தி பில்லியன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் பிரித்விராஜ் கோத்தாரி கூறுகிறார். இந்த இரண்டிற்குமே நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி உண்டு என கூறும் அவர், எக்ஸ்பென்ஸ் ரேஷியோ அடிப்படையில் பார்க்கும்போது கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளை விட கோல்டு ஈடிஎஃப்கள் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு தருகின்றன என அவர் கூறுகிறார் .
[ad_2]


