[ad_1]
சென்னையில் நேற்று ஏற்றமடைந்த தங்கம் விலை இன்றைய தினம் குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் சென்னையில் ஆபரண தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் சாமானிய மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தொடர்ந்து 5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் நேற்று ஒரே நாளில் திடீரென உயர்ந்தது. ஒரே நாளில் இரண்டு முறை என சவரனுக்கு சுமார் 2000 ரூபாய் உயர்ந்தது. இதனால் தங்கம் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ மக்கள் கலக்கமடைந்தனர். இத்தகைய சூழலில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

மக்கள் நகைகளாக வாங்க கூடிய 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 225 ரூபாய் விலை குறைந்து 11,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் 90,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 1800 ரூபாய் விலை சரிந்து ஒரு சவரன் 88,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 17ஆம் தேதி 97,000 கடந்து உச்சத்தை எட்டிய நிலையில் அதில் இருந்து சுமார் 9000 ரூபாய் வரை சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து சரிவிலேயே இருக்க வேண்டும் என சாமானிய மக்கள் விரும்புகின்றனர். இருந்தாலும் அது சர்வதேச காரணிகளை பொறுத்து தான் மாறும்.
24 கேரட் தங்கம் கிராமுக்கு 246 ரூபாய் குறைந்து 12,109 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1968 ரூபாய் குறைந்து 96,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 190 ரூபாய் விலை குறைந்து 9,260 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1520 ரூபாய் சரிந்து 74,080 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அமெரிக்கா சீனா இடையே ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாதகமான சூழல், லாபத்தை எடுக்கும் முதலீட்டாளர்கள் உள்நாட்டில் தேவை குறைந்தது ஆகியவை தான் தங்கம் விலை குறைவதற்கு காரணமாக உள்ளது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று சரிவை கண்டிருக்கிறது கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் விலை குறைந்து 1, 65,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
[ad_2]


