இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைக் காலம் முடிந்துள்ள வேளையில், நவராத்திரி, தன்தேரஸ், தீபாவளி பண்டிகை நாட்களில் நாட்டில் பொதுவாகவே தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் பொது மக்களை பழைய நகைகளை புதியவற்றுக்கு மாற்றுவது எப்போதும் இல்லாமல் இந்த பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கம் மட்டும் அல்லாமல், சுமார் 22,000 டன் தங்கம் இந்திய மக்களின் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கம் விலை உயர்ந்துள்ள காரணத்தால், மக்களை தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்பனை செய்துவிட்டு புதிய டிசைன் நகைகளாக மாற்றுவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் பகுதிகளில் புதிதாக நகைகள் வாங்கும் பெரும்பாலான மக்கள் பணத்தை கொண்டு நகைகளை வாங்குவது நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகளை வாங்குவது அதிகரித்து வருவதாக நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக தங்க காயின்கள், தங்க பார்களை கொடுத்து அதிகப்படியான மக்கள் புதிய நகைகளை வாங்குவதாக நகை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளர். இதேபோல் சிறிய அளவில் நகை வாங்குவோரில் அதிக எண்ணிக்கையில் பழைய நகைளை கொடுத்துவிட்டு புதிய நகைகளை வாங்குவதாக பெயர் வெளியிட விரும்பாத நகை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தரவுகளை நாட்டின் முன்னணி நகை கடை பிராண்டுகளின் பண்டிகை கால விபரங்களை மீண்டும் உறுதி செய்திகிறது. இந்த ஆண்டு தன்தேரஸ் பண்டிகை காலக்கட்டத்தில், டாடாவின் தனிஷ்க் நிறுவனத்தின் மொத்த விற்பனை மதிப்பில் கிட்டத்தட்ட பாதி அதாவது 50% விற்பனை பழைய நகைகளை மாற்றுவதன் மூலம் நடந்திருக்கும் என தோராயமாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு 35 சதவீதமாக இருந்தது என தெரிகிறது
இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தங்க நகை விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33% வர்த்தகம் பழைய நகைகளை மாற்றுவதன் மூலம் வந்தாகவும், இது கடந்த ஆண்டு 22 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சென்கோ கோல்ட் நிறுவனமும், இந்த ஆண்டு 45 சதவீத விற்பனை நகை மாற்றுவதன் மூலம் வந்தாகவும், இது கடந்த ஆண்டு 35 சதவீதமாக இருந்ததாகவும் கூறியுள்ளது. தங்கம் விலை உயர்வால் மக்கள் புதிய முதலீடு செய்வதற்கு பதிலாக, பழைய நகைகளை மறுசுழற்சி செய்ய விரும்புவதை தெளிவாக காட்டுகிறது.
இந்த மறுசுழற்சி போக்கு இந்திய வீடுகளை புதைந்திருக்கும் சுமார் 20000 டன் தங்கம் மறு பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது. தங்கத்தின் உயர் விலை, மக்களை பழைய நகைகளை மாற்றுவதை தாண்டி, பழைய தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வாங்குவதும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வை இந்திய மக்கள் பல வழிகளில் மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். மறுப்புறம் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வின் காரணமாக டிஜிட்டல் தங்கமாகவும், ETF ஆகவும் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் பல கோடி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் முன்னணி முதலீட்டு சந்தை நிபுணர் தங்கம் விலை எந்த அளவுக்கு குறையும் என கணித்துள்ளார்.

