latest

சினிமாவை மிஞ்சிய தங்க கடத்தல்.. அலறவிட்ட துபாய் பயணி.. டிரெண்டாகும் வீடியோ..!


தங்கம் விலை அதிரடியாக உயர துவங்கிய நாளில் இருந்து இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரித்துவிட்டதாக சுங்க துறை அதிகாரிகள் கூறிய செய்தி வெளியிடப்பட்ட நிலையில், துபாய் பயணி ஒருவர் மிகவும் திறமையாக தங்கத்தை கடத்த முயற்சி செய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

சூர்யா நடித்து வெளியான அயன் படத்தில் தங்கம், வைரம் ஆகியவற்றை எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது என்பதை காட்டப்படுகிறது. ஆனால் பல கடத்தல்காரர்கள் பல வித்தியாசமான வழிகளில் தங்கத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர், இதில் ஒன்று தான் இந்த துபாய் பணியின் ஐடியா. மறக்காமல் வீடியோவை பாருங்கள்.

சினிமாவை மிஞ்சிய தங்க கடத்தல்.. அலறவிட்ட துபாய் பயணி.. டிரெண்டாகும் வீடியோ..!

இந்திய சுங்கத் துறை அதிகாரிகள், துபாயிலிருந்து டெல்லி வந்த பயணி ஒருவர் தண்ணீர் பாட்டில் மூடியில் தங்கத்தை மறைத்து கடத்த முயன்றதை கண்டுப்பிடித்துள்ளனர்.

அக்டோபர் 25ஆம் தேதியன்று ஏர் இந்தியா AI-996 விமானத்தில் பயணித்த இந்திய பயணியை முன்கூட்டியே புலனாய்வு துறையின் மூலம் கிடைத்த தகவல் அடிப்படையில் சுங்க துறை அதிகார்கள் இந்த பணியை பிளைட் கேட்டில் இருந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், இப்பயணி கிரீன் சேனல் வழியாக செல்ல முயன்றபோது பிடிபட்டார்.

இந்த துபாய் பணியை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து, அவர் வைத்திருந்த வாட்டர் பாட்டில் மூடியை பரிசோதித்தபோது, பாட்டில் மூடி இருக்கும் பகுதியில் பாட்டிலின் வாய் பகுதி அளவிற்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்ட உருளை வடிவ தங்கத்தை கண்டறிந்தனர். இந்த தங்கம், வழக்கமான பரிசோதனைகளில் கண்டறியப்படாதவாறு, பாட்டில் மூடியின் உள்ளே பொருத்தப்பட்டிருந்தது.

பிடிப்பட்ட 170 கிராம் எடையுள்ள இந்த தங்கம் சுமார் 21 லட்சம் மதிப்புடையதாகும். தங்கம் விலை உயர்வும், தங்கத்திற்கு உருவான டிமாண்ட் ஆகியவையே இத்தகைய கடத்தலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் தங்கம் கடத்தலை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஏற்கனவே தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்த வேலையிலும் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இனி டெல்லி விமான நிலையத்தில் மட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து விமான நிலையத்திலும் கூடுதல் கண்காணிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#WATCH | Delhi Customs at IGI Airport seized 170 grams of gold from an Indian passenger who arrived from Dubai on flight AI-996 dated October 25, 2025. The passenger was discreetly followed from the flight gate and intercepted while attempting to exit through the green channel.… pic.twitter.com/q3OoUPpwey

— ANI (@ANI) October 26, 2025 “>




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *