இந்தியாவின் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள் . குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையிலான மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு ரயில்களில் செல்வதுதான் எளிமையானதாகவும் சௌகரியமானதாகவும் இருக்கிறது.
ரயிலில் செல்வதற்கு பொதுவாக நாம் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் முன் பதிவு செய்யும்போது நம்முடைய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு சென்று விடும். அது கன்ஃபார்ம் ஆனதா இல்லையா என அடிக்கடி பார்த்து கொண்டே இருக்க வேண்டும். இத்தகைய சூழலில் தான் ஐஆர்சிடிசி விகால்ப் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது .

உங்களுடைய டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டிலேயே இருக்கிறது என்றால் நீங்கள் அதே வழியில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலுக்கு உங்களுடைய டிக்கெட்டை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இதன் மூலம் அந்த ரயிலில் உங்கள் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிடும் என உறுதிப்படுத்த முடியாது . ஆனால் அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும். அதே பாதையில் செல்லக்கூடிய வேறு ஒரு ரயிலுக்கு விகால்ப் திட்டம் மூலம் டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம் . இதற்காக கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
அந்த சமயத்தில் ரயிலுக்கான சார்ட் தயார் செய்யப்படும் போது டிக்கெட் இருந்தால் உங்களுக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகும். ஒருமுறை இந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய டிக்கெட்டை வேறு ரயிலுக்கு மாற்றம் செய்து விட்டால் மீண்டும் பழைய ரயிலுக்கு மாற்ற முடியாது.
ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் கனெக்ட் செயலி மூலம் நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உங்களுடைய பயணம் செய்யும் தேதி, குறிப்பிட்ட அந்த ரயில் , பயணிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும். அப்போது உங்களுக்கு Opt Vikalp / Alternate Train என்ற ஒரு ஆப்ஷன் காட்டும். அதில் காட்டக்கூடிய பட்டியலில் இருந்து 7 மாற்று ரயில்களை நாம் தேர்ந்தெடுக்கலாம் . இவை அனைத்தும் அதே பாதையில் செல்லக்கூடிய ரயில்களாக தான் இருக்கும் .

ஒருவேளை டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இந்த விகால்ப் என்பதை தேர்ந்தெடுக்க தவறிவிட்டீர்கள் என்றால் கவலை இல்லை. பின்னர் நீங்கள் புக் டிக்கெட் ஹிஸ்டரிக்கு சென்று உங்களுடைய ரயில் பயணத்திற்கான சார்ட் தயார் செய்யப்பட்டதா என்பதை பரிசோதிங்கள் இல்லை என்றால் அப்போது கூட உங்களால் இந்த விகால்ப் திட்டம் மூலம் ரயிலை மாற்றிக் கொள்ள முடியும்.
ஒரு முறை இப்படி டிக்கெட்டை வேறு ரயிலுக்கு மாற்றி விட்டால் அதனை ரத்து செய்ய முடியாது. அப்படியே ரத்து செய்தாலும் முழு டிக்கெட் கட்டணம் உங்களுக்கு கிடைக்காது. மேலும் பயண தேதி, பயணிக்கும் நபர் உள்ளிட்ட விவரங்லளையும் மாற்ற முடியாது. இருந்தாலும் ஒரு ரயிலில் டிக்கெட் உறுதியாக வில்லை மற்றொரு ரயிலில் டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனும் போது இந்த விகால்ப் வசதி உங்களுக்கு உதவியாகவும் சௌகரியமான பயணத்தையும் ஏற்படுத்தி தரும்.