latest

    திடீரென ஐரோப்பிய நாடுகளில் பணத்தை கொட்டும் இந்திய நிறுவனங்கள்.. ஓ இது தான் விஷயமா..?


    இந்தியாவில் பணவீக்கம், வர்த்தகம், வளர்ச்சி வாய்ப்புகள் சிறப்பாக இருந்தாலும், புதிய வர்த்தகத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் இல்லாத வகையில் சுருங்கியுள்ளது.

    ஒருபக்கம் அமெரிக்கா விதித்த வரி, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், சீனா உடன் இந்தியாவுக்கு இருக்கும் முறன்பாடுகள் ஆகியவை இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களை புதிய சந்தைகளை தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    திடீரென ஐரோப்பிய நாடுகளில் பணத்தை கொட்டும் இந்திய நிறுவனங்கள்.. ஓ இது தான் விஷயமா..?

    இதனால் இந்திய நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தக விரிவாக்கத்திற்காக ஐரோப்பாவை புதிய இலக்காக மாற்றியுள்ளது. ஐரோப்பாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடும் இந்திய நிறுவனங்கள் தற்போது பெரும் தொகையில் ஐரோப்பிய நிறுவனங்களை கைப்பற்றி வருகிறது.

    இந்த கைப்பற்றல் மூலம் அந்நாட்டின் வர்த்தகத்தை மட்டும் அல்லாமல் தொழில்நுட்பத் திறன், ஊழியர்கள் என அனைத்தையும் மொத்தமாக கையகப்பற்றி வருகிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்காவில் இந்தியா இழக்கும் வர்த்தகத்தை ஈடு செய்யும் முயற்சியாகவே விளங்குகிறது.

    2025 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் இந்திய நிறுவனங்கள் mergers and acquisitions தொடர்பாக சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது என ப்ளூம்பெர்க் தரவுகள் கூறுகிறது. இதேபோன்ற விஷயம் 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று காலத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2006ஆம் ஆண்டில் சுமார் 15.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    2025ல் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களின் லிஸ்ட்:

    1. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இத்தாலி நாட்டின் Iveco Group என்வி-யை 4.4 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
    2. மார்ச் மாதம் மும்பை சார்ந்த சுதர்ஷன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் ஜெர்மனியின் Heubach பிக்மென்ட் நிறுவனத்தை வாங்கியது.
    3. ஜூன் மாதம் விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினியரிங் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் Lauak Group என்ற விமான உதிரிபாக உற்பத்தி நிறுவனத்தில் பெரும்பான்மை பங்கைப் பெற ஒப்பந்தம் செய்தது.
    4. ஜூலை மாதம் ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குரூப் இங்கிலாந்த் நாட்டின் Lancashire Cricket நிறுவனத்துட்ன் இணைந்து பிரிட்டன் நாட்டின் தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரின் Manchester Originals அணியை கையகப்படுத்தியது. இந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களின் ஐரோப்பிய சந்தை வேகமாக நுழைந்து வருவதை காட்டுகிறது.

    வரவிருக்கும் ஒப்பந்தங்கள்:

    1. ஆரோபிந்தோ பார்மா செக் குடியரசு நாட்டின் Prague-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Zentiva நிறுவனத்தை அட்வென்ட் இன்டர்நேஷனலிடமிருந்து கையகப்படுத்த போட்டியிட்டு வருகிறது.
    2. செப்டம்பர் மாதம் ஜின்டால் குரூப் ஜெர்மனி நாட்டின் Thyssenkrupp ஏஜி நிறுவனத்தின் ஸ்டீல் பிரிவை கையகப்படுத்தும் திட்டத்தை முன்வைத்துள்ளது.

    ஏன் ஐரோப்பா முக்கியம்?
    ஐரோப்பா இந்திய நிறுவனங்களுக்கு வளர்ந்த சந்தை, மேம்பட்ட தொழில்நுட்பம், நிலையான வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றை வழங்குகிறது. இதை தாண்டி அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகள், டிரம்ப் அரசின் வரி மற்றும் விசா கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பிறகு, இந்திய நிறுவனங்கள் ஐரோப்பாவை மாற்று இலக்காகக் கொண்டுள்ளன.

    இந்த மாற்றம் மூலம் ஐரோப்பாவில் இருந்து இந்திய நிறுவனங்கள் தனது தயாரிப்பை அமெரிக்காவுக்கு விற்க முடியும், இதேபோல் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஊழியர்களை எல்1 விசா மூலம் அனுப்பி பணியில் அமர்த்தவும் முடியும்.

    இந்திய நிறுவனங்களின் இத்தகைய முதலீடுகள் உள்நாட்டு வளர்ச்சி வாய்ப்பில் சிறிய அளவிலான தேக்கத்தை ஏற்படுத்தினாலும், கையகப்படுத்தப்படும் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், திறன்வாய்ந்த தொழிலாளர்களையும் இந்தியாவுக்கு எளிதாக பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும்.


    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *