ஷாக்கிங் தகவல்.. இந்திய டெக் ஊழியர்களின் சம்பளம் 40% சரிவு.. அமெரிக்காவில் உச்சம் தொட்ட ஊதியம்..!!


இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத் துறை வல்லுநர்களின் ஊதியத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள அதே பணிப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு ஊதியம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஊதிய மேலாண்மை தளமான டீல் (Deel) மற்றும் கார்டா (Carta) நிறுவனம் இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு : 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் பொறியியல் மற்றும் டேட்டா தொடர்பான பணிகளுக்கான சராசரி ஊதியம் கடந்த ஆண்டின் 36,000 அமெரிக்க டாலரில் இருந்து 22,000 டாலராக, அதாவது 40% சரிந்துள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்காவில் இதே பணிகளுக்கான சராசரி சம்பளம் 122,000 டாலரில் இருந்து 150,000 டாலராக உயர்ந்துள்ளது.

ஷாக்கிங் தகவல்.. இந்திய டெக் ஊழியர்களின் சம்பளம் 40% சரிவு.. அமெரிக்காவில் உச்சம் தொட்ட ஊதியம்..!!

அதேபோல், இந்தியாவில் ப்ராடக்ட் மற்றும் டிசைன் துறையில் உள்ள வல்லுநர்களின் சராசரி ஊதியம் 23,000 டாலராக குறைந்துள்ளது. இது அமெரிக்காவில் இதே துறையினருக்கு கிடைக்கும் 138,000 டாலர் ஊதியத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும்.

உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பாலின ஊதியப் பாகுபாடு நீடித்தாலும், ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒருவித சமநிலை காணப்படுகிறது. இந்தியாவில் விற்பனைப் பணிகளில் முழுமையான பாலினச் சமத்துவம் நிலவுகிறது. ஆண், பெண் இருபாலரும் சராசரியாக 12,000 டாலர் ஊதியம் பெறுகின்றனர்.

பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சராசரி ஊதியம் 13,000 டாலர் முதல் 23,000 டாலர் என்ற வரம்புக்குள் உள்ளது. ஆனால், ப்ராடக்ட் மற்றும் டிசைன் பணிகளில் ஆண்களுக்கு சராசரி ஊதியம் 23,000 டாலராகவும், பெண்களுக்கு 18,000 டாலராகவும் உள்ளது. டேட்டா தொடர்பான பணிகளில் ஆண்களுக்கு 18,000 டாலர் மற்றும் பெண்களுக்கு 13,000 டாலர் என சிறிய இடைவெளிகள் நீடிக்கின்றன. ஆனால் கனடா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த இடைவெளி அதிகமாக உள்ளது.

ஈக்விட்டி சார்ந்த ஊதிய உயர்வு : இந்தியாவில் சம்பள அமைப்பு அழுத்தத்தைச் சந்திக்கும் வேளையில், உலகளவில் சிறந்த தொழில்நுட்பத் திறமைகளுக்கான மொத்த ஊதியத்தில் ஈக்விட்டி எனப்படும் நிறுவனப் பங்கு சார்ந்த ஊதியத்தின் பங்கு அதிகரித்து வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பிரேசில் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில், பொறியியலாளர்களுக்கான சராசரி ஈக்விட்டி பங்களிப்பு வேகமாக வளர்ந்து வருவது இந்த மாற்றத்தை உறுதி செய்கிறது.

இந்த மாற்றங்கள், பாரம்பரிய சம்பள முறைகளை மட்டுமே சார்ந்திராமல், நிறுவனத்தின் பங்குகளை ஊதியத்தின் ஒரு பகுதியாக வழங்கும் புதிய உலகளாவிய ஊதிய மாதிரியை நோக்கி செல்வதைக் காட்டுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *