தங்கம் விலை உயர்வால் என்ன நடந்திருக்கு பாத்தீங்களா? இந்த விஷயத்துல இந்தியர்கள் தான் கில்லாடி!!


நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மக்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. ஒரு புறம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல பொருட்களின் விலை குறைந்து மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்தது. அதே வேளையில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

தீபாவளி பண்டிகையின் போது தங்கம் வாங்கக்கூடிய பழக்கம் இந்தியர்கள் மத்தியில் இருக்கிறது. தீபாவளி பண்டிகை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இதனால் வழக்கமாகவே தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து விலையும் உயரும். இந்த ஆண்டில் தங்கம் விலை சர்வதேச காரணிகளாலும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது.

தங்கம் விலை உயர்வால் என்ன நடந்திருக்கு பாத்தீங்களா? இந்த விஷயத்துல இந்தியர்கள் தான் கில்லாடி!!

இந்தியாவின் நிதி தலைநகரம் என அழைக்கப்படும் மும்பையில் நாட்டின் மிகப் பழமையான மற்றும் பாரம்பரியமான நகை சந்தை செயல்படுகிறது. இதனை ஜாவேரி பஜார் என அழைக்கிறார்கள். இந்த ஜாவேரி பஜாரில் தீபாவளி பண்டிகை என்றாலே விற்பனையும் கூட்டமும் களைகட்டும். இந்த ஆண்டும் தீபாவளியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்திருந்தார்களாம். ஆனால் இவ்வாறு வந்த மக்கள் பெரும்பாலானவர்கள் தங்க நகைகளுக்கு மாற்றாக இந்த ஆண்டு தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகளை வாங்கி இருக்கிறார்கள் .

ஜாவேரி பஜாரில் மொத்த விற்பனை கடை நடத்தி வரக்கூடிய மகாவீர் கோத்தாரி என்பவர் சிஎன்பிசி தளத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். எப்போதும் தீபாவளி பண்டிகையின் போது தங்க நகைகளுக்கான டிமாண்ட் தான் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த முறை தங்க நாணயம் மற்றும் தங்க கட்டிகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன எனக் கூறுகிறார் .

Also Read

ஸ்மார்ட் போன் வாங்குற பிளான் இருக்கா? இப்போவே வாங்கிடுங்க.. சீக்கிரம் விலை உயர போகுது!!

அனைத்திந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின் படி இந்த ஆண்டு தீபாவளியின் போது ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரையிலான 5 நாட்களும் இந்தியாவில் 8 பில்லியனில் இருந்து 11 மில்லியன் டாலர்கள் வரையிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார் கூறியிருக்கிறார்.

தீபாவளி பண்டிகையின் முதல் நாளான அக்டோபர் 19ஆம் தேதியே 40 டன்களுக்கும் அதிகமான தங்கம் விற்பனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி பண்டிகை என்றாலே பத்தில் ஒருவர்தான் தங்க நாணயத்தை வாங்குவார்கள் ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறி இருந்தது என இந்திய நகை விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் கூறுகிறார். இந்த ஆண்டு தங்க நகைகளின் விற்பனை முப்பது சதவீதம் குறைந்து இருப்பதாக அவர் தெரிவிக்கிறார் .

Recommended For You

பெட்டி பெட்டியாக வந்திறங்கிய தங்கம்!! ரிசர்வ் வங்கி செய்த வேலையை பாத்தீங்களா..?

பெரும்பாலான இந்தியர்கள் தற்போது தங்கத்தில் செய்யும் முதலீடு பின்னாளில் தங்களுக்கு பெரிய அளவில் லாபம் தர வேண்டும் எனவும் தங்கத்தை ஒரு முதலீடாகவும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர் என கூறுகிறார் .தங்கத்தை அணியும் ஒரு பொருளாக இல்லாமல் முக்கியமான ஒரு முதலீட்டு சொத்தாகவும் இந்தியர்கள் பார்க்க தொடங்கி இருக்கின்றனர் என்பதையே இந்த மாற்றம் குறிப்பிடுகிறது.

பொதுவாக தங்கத்தை நாம் நகையாக வாங்கினால் அதற்கு தங்கத்திற்கான விலையுடன் சேர்த்து செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி ஆகியவற்றை செலுத்த வேண்டும். ஒரு பவுன் தங்கத்தின் விலை 90,000 ரூபாய் என வைத்து கொண்டால் செய்கூலி சேதாரம் 15% , ஜிஎஸ்டி 3% என நாம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும். இதுவே நாணயம் , பார் என்றால் 90,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தினால் போதும் செய் கூலி சேதாரம் மிக குறைவாகவே தான் இருக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *