latest

தனி ஜெட் விமானம் முதல் ஆடம்பர பங்களா வரை.. ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி..!!


பாலிவுட்டின் ‘பாட்ஷா’ என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான், வெள்ளித்திரையை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஒரு ராஜா போல வாழ்ந்து வருவதை நிரூபித்துள்ளார். சுமார் ரூ.12,490 கோடி நிகர சொத்து மதிப்புடன், பல பிரம்மாண்டமான மற்றும் விலைமதிப்பற்ற சொத்துக்களின் உரிமையாளராகவும் இவர் இருந்து வருகிறார். தயாரிப்பு நிறுவனத்தில் தொடங்கி தனி விமானம் வரை நீளும் ஷாருக்கானின் சொத்துப்பட்டியலில் உள்ள, அதிக மதிப்பு கொண்ட விஷயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் (Red Chillies Entertainment) : ஷாருக்கானின் மொத்த சொத்தில் பெரும் பகுதி அவரது ‘ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வருகிறது. ரூ.500 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்படும் இந்த நிறுவனம், 2002இல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம், ‘மை ஹூன் நா’, ‘ஓம் சாந்தி ஓம்’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ போன்ற பல பெரிய வெற்றிப் படங்களை பாலிவுட்டுக்கு வழங்கியுள்ளது.

தனி ஜெட் விமானம் முதல் ஆடம்பர பங்களா வரை.. ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி..!!

மன்னத் மாளிகை : ஷாருக்கான் மும்பையில் ஒரு மாளிகையையே வாங்கியுள்ளார். 6 மாடிகள் கொண்ட, கடலை ஒட்டி அமைந்துள்ள ‘மன்னத்’ மாளிகை, மும்பையின் மிகவும் சின்னமான சொத்துக்களில் ஒன்றாகும். இதன் மதிப்பு சுமார் ரூ.200 கோடி என்று மதிப்பிடப்படுகிறது.

டெல்லி பங்களா : ஷாருக்கானின் மனைவியான கௌரி கான் வடிவமைத்த, டெல்லியில் உள்ள அவரது சொந்த பங்களாவின் மதிப்பு சுமார் ரூ.200 கோடி ஆகும். கடந்த 2001-ஆம் ஆண்டு வாங்கிய இந்த வீடு, கௌரி கானின் சிறப்புத் தொடுதலுடன், குடும்பப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அரச தோற்றத்துடன் திகழ்கிறது.

லண்டன் இல்லம் : தேசிய விருது வென்ற ஷாருக்கான், லண்டனின் மேஃபேர் பகுதியில் சுமார் ரூ.175 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டையும் வைத்துள்ளார். ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் விடுமுறையை இந்த லண்டன் வீட்டில் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அலிபாக் எஸ்டேட் : விடுமுறை இல்லங்களைப் பற்றி பேசும்போது, அலிபாக் எஸ்டேட்டை மறக்க முடியாது. 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தச் சொத்தின் மதிப்பு தோராயமாக ரூ.15 கோடி இருக்கும். கடற்கரைக் காட்சிகள், ஆடம்பரமான உட்புறங்கள் மற்றும் மரத்தாலான தளங்களுடன் விடுமுறைக்கான சிறந்த சூழலை கொண்டிருக்கிறது.

துபாய் வில்லா : ‘ஜன்னத்’ என்று பெயரிடப்பட்ட ஷாருக்கானின் துபாய் வில்லா, உலகின் மிகப்பெரிய செயற்கைத் தீவுக்கூட்டமான பாம் ஜுமேராவின் (Palm Jumeirah) ஃபிராண்ட் கேவில் அமைந்துள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த சொத்து, துபாயைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான நகீல் பிஜேஎஸ்சி கொடுத்த பரிசாகும். 8,500 சதுர அடி பரப்பளவில் 6 படுக்கையறைகள், ஒரு தனி கடற்கரை மற்றும் இரண்டு ரிமோட் கண்ட்ரோல் கராஜ்கள் என அனைத்து ஆடம்பர அம்சங்களையும் இது கொண்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : மிகவும் பிரபலமான ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷாருக்கானின் சொத்துக்களில் ஒன்றாகும். இந்த அணி 3 முறை (2012, 2014, 2024) கோப்பையை வென்றுள்ளது. இதில் ஷாருக்கானின் நிறுவனம் 55% பங்குகளை வைத்துள்ளது, மீதமுள்ள 45% பங்குகள் ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜெய் மேத்தா குழுமத்திடம் உள்ளது.

தனி விமானம் : ஷாருக்கானிடம் ஒரு தனி ஜெட் விமானம் உள்ளது. குல்ஃப்ஸ்ட்ரீம் ஜி550 (Gulfstream G550) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் மதிப்பு சுமார் ரூ.260 கோடி ஆகும். 19 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இது, உலகத் தரத்திலான அனைத்து வசதிகளையும் கொண்டிருப்பதால், ஷாருக்கானின் மிகவும் ஆடம்பரமான உடைமைகளில் இதுவும் ஒன்றாகும்.

சொகுசுக் கார் கலெக்‌ஷன் இவரது கேரேஜில் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் உயர்தரமான ஆட்டோமொபைல் பிராண்டுகள் உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.20 கோடிக்கும் அதிகமாகும். இதில் உள்ள குறைவான விலை கொண்ட கார் சுமார் ரூ.2.6 கோடி முதல் மிகவும் விலையுயர்ந்த கார் ரூ.10 கோடி வரை மதிப்பிடப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *