உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

“இன்ஸ்டா ரீல்ஸ் தயாரிப்பவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் அல்ல" – நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை!

தினப்புயல் • • இப்போதே • சுமார் 1 நிமிடம்
“இன்ஸ்டா ரீல்ஸ் தயாரிப்பவர்களெல்லாம் பத்திரிகையாளர்கள் அல்ல" – நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை!
வாசிப்பு
Facebook Telegram

Pபத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்பை, இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' தயாரிப்பாளர்கள் மற்றும் யூடியூபர்கள் தன்னிச்சையாகக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், துன்புறுத்தியதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதமாக டெல்லி காவல்துறை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.

.

அந்தப் பிரமாணப் பத்திரத்தில், “தொழில்முறைப் பத்திரிகையாளர்கள் என்பவர்கள் தனிப் பிரிவினர். வணிக நோக்கங்களுக்காகவும் சமூக வலைதளங்களுக்காகவும் கேமரா மற்றும் மைக்குகளை ஏந்திச் செல்லும் நபர்களையும், செய்தியாளர்களையும் ஒன்றாகக் கருத முடியாது. இத்தகைய சமூக வலைதள கண்டென்ட் கிரியேட்டர்ஸ்களை பத்திரிகையாளர்கள் என்ற அந்தஸ்துக்கு உயர்த்த முடியுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.

.

அங்கீகார அட்டை இல்லாத செய்தியாளர்கள் உட்பட தேசிய, சர்வதேச மற்றும் பிராந்திய ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை முழுமையாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறை பதிவு செய்த வீடியோக்களையும் சமர்பித்திருக்கிறோம். போராட்டக் களத்தில் கேமராக்களுடன் நின்றவர்களில் பலர் யூடியூபர்கள் மற்றும் ரீல்ஸ் தயாரிப்பாளர்களாக இருந்ததால், கூட்ட நெரிசலில் உண்மையான பத்திரிகையாளர்களையும் போராட்டக்காரர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில் காவலர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது.

மேலும், சிலர் தங்களைப் பத்திரிகையாளர்கள் எனப் பொய்யாக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், 'பிரஸ்' அட்டை வைத்திருந்த மாணவி ஒருவர் விசாரணையின் போது தான் இன்னும் பத்திரிகையாளராகவில்லை என ஒப்புக்கொண்ட வீடியோ ஆதாரமும் இருக்கிறது.

.

சில யூடியூபர்கள் வீடியோ எடுப்பதற்காகக் காவல்துறையினருடன் வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதைத் தவிர, ரீல்ஸ் தயாரிப்பாளர்கள் கூடத் தடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களைத் திட்டமிட்டுத் தடுக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை. சட்டவிரோதமாகக் கூடியவர்களைக் கலைக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடையாளம் தெரியாமல் தவறுதலாகப் பிடிக்கப்பட்டவர்கள் கூட, விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். தடை உத்தரவுகள் அனைவருக்கும் பொதுவானவை."

.ஊடகவியலாளர் அருண் ராம்: “இது பாசிசமா பாயாசமா?" – முதல்வர் விஜய்யிடம் கேள்வி எழுப்பும் ஸ்டாலின்!.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →