இந்தோனேசியா அதிபர் தேர்தல்!

இந்தோனேசிய முன்னாள் அதிபர் ஜோகோ விடோடோவின் மகன் ஜிப்ரான். இவர் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிட்டார். இந்தோனேசியச் சட்டப்படி, துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர் மேல்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான கல்வியை முடித்திருக்க வேண்டும். சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்ற ஜிப்ரான், 2024 தேர்தல் வேட்புமனுவின் போது தனது மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்கு இணையான இந்தோனேசியச் சான்றிதழைச் சமர்ப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடந்த அதிபர் தேர்தலிலும் அதிபர் பிரபோவோ சுபியாண்டோவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்று துணை அதிபரானார்.

துணை அதிபருக்கு எதிரான சிக்கல்!

இதற்கிடையில் அதிபர் ஜிப்ரான் சமர்பித்த கல்வி ஆவணங்கள் விவாதத்துக்குள்ளானது. இது தொடர்பான வழக்கும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்டதே பள்ளிப் படிப்பை முடித்ததற்கான சான்று என ஜிப்ரான் தரப்பில் வாதிடப்பட்டது. அதை ஏற்காத நீதிமன்றம், `ஜிப்ரான் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததற்கான வெளிநாட்டுச் சான்றிதழோ அல்லது அதற்கு இணையான ஆவணமோ இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' எனத் தீர்ப்பளித்தது.

இதே கருத்தை முன்னதாக அக்டோபர் மாதத்தில் அரசியலமைப்பு நீதிமன்றமும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், தனது கல்வித் தகுதியை நிரூபிக்க வாய்ப்பு வழங்குமாறு செவ்வாய்க்கிழமை அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அரசியல் அழுத்தங்கள்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கிப்ரானுக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கினர். சுமார் 120 உறுப்பினர்கள் இதற்கான முன்மொழிவைத் தயார் செய்திருந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படவிருப்பதாகத் துணை சபாநாயகர் சான் முஸ்தோபா தெரிவித்திருந்தார்.

முன்னாள் அதிபர் ஜோகோ விடோடோவுக்கும், தற்போதைய அதிபர் பிரபோவோவுக்கும் இடையே உருவான அரசியல் கூட்டணியின் விளைவாகவே 36 வயதான ஜிப்ரான், வயது வரம்பு விலக்கு பெற்றுத் துணை அதிபரானார். ஆனால், சமீபகாலமாக இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜோகோவியின் கனவுத் திட்டமான 'நுசந்தாரா' புதிய தலைநகர் கட்டுமானப் பணிகளில் அதிபர் பிரபோவோ போதிய ஆர்வம் காட்டாமல், தனது இலவசப் பள்ளி உணவுத் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். மேலும், ஜோகோவியின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி உள்ளிட்டோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டன.

ராஜினாமா கடிதம்

கடந்த வாரம், அதிபரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், ஜோகோவியின் நெருங்கிய கூட்டாளியும் அதிபரின் தலைமைச் செயலாளருமான லிஸ்டியோ சிகித் பிரபோவோ கைது செய்யப்பட்டுப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், திங்கள்கிழமை அன்று பிரபோவோ அமைச்சரவையைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், ஜோகோவியின் இளைய மகன் கேசங் பங்கரேப் தலைமையிலான கட்சியிலிருந்து கூண்டோடு விலகினர். இத்தனை அரசியல் சூழல்களாலும், அழுத்தங்களாலும் ஜிப்ரான் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதை அதிபர் தேர்தலில் கிப்ரானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 'புரோஜோ' தன்னார்வலர் அமைப்பின் தலைவர் புடி ஆரி செதியாடி, உறுதிப்படுத்தியுள்ளார். ஜகார்த்தாவில் உள்ள ஹலிம் பெர்டானகுசுமா விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போது, அதிபர் பிரபோவோ சுபியாண்டோவிடம் ஜிப்ரான் தனது ராஜினாமா கடிதத்தை நேரில் வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது ராஜினாமாவை அதிபர் பிரபோவோ ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், இந்தோனேசியா பல்வேறு நிர்வாக மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அரசின் இலவசப் பள்ளி உணவுத் திட்டத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் காட்டுத்தீ பாதிப்புகள், பங்குச்சந்தை முறைகேடு புகார்கள் மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய இக்கட்டான சூழலில் துணை அதிபரின் ராஜினாமா இந்தோனேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb